காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், கடந்த 17-ந் தேதி வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக பகுதிகளை நோக்கி வரும், கன மழை இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இது இந்த பருவமழை காலத்தின் 3-வது மழைப்பொழிவாக பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை பெரிய அளவில் பெய்யவில்லை. ஆனால் அதேநேரத்தில் சென்னை உள்பட உள்மாவட்டங்களில் மலை பிரதேசங்களில் இருப்பது போன்ற குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதற்கு காரணமாக, மே மாதங்களில் ஏதாவது புயல், தாழ்வு மண்டலம் உருவாகும்போதோ அல்லது அது கடந்து செல்லும்போதோ எப்படி வட இந்திய பகுதிகளில் உள்ள வறண்ட காற்று உள்ளிழுக்கப்பட்டு வெப்பம் எப்படி அதிகரிக்கிறதோ?, அதேபோல்தான் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதிகளுக்கு அருகில் வந்தததால், வட இந்திய பகுதிகளில் உள்ள குளிர்ந்த காற்றை இழுத்து சென்னை மற்றும் உள் மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காற்றழுத்த
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதுவும் தமிழகத்தின் வட மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு தமிழகத்தில் குறைவாக இருப்பதாகவும், இந்த இடைவெளிக்கு பிறகு, டிசம்பர் 2-வது வார தொடக்கத்திலோ அல்லது 3-வது வாரத்திலோ இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு வானிலை நிகழ்வு ஏற்பட உள்ளதாகவும், அதன் காரணமாக மீண்டும் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிகழ்வு புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்துக்கே அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு மைய வட்டாரங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
Related Post
வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!
வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையம்…
புதுச்சேரி
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…
கனமழை எச்சரிக்கை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மழை: வானிலை மையம் தகவல்!
“சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டம் உட்பட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்…
அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!
சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா? அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த…
ரூ. 2000 கோடியை முதலீடு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின்.. எதில் தெரியுமா
இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் என…
Categories
- Sports (85)
- TN Political Zone (345)
- Trending Tamil (709)
- Viral Social (12)
- அரசியல் (222)
- இந்தியா (478)
- உலகம் (174)
- சினிமா (827)
- தமிழ்நாடு (1,134)
Recent Posts
- விஜயுடன் இணைந்து அரசியல் பயணம்’ அதிரடியாக அறிவித்த ராகவா லாரன்ஸ்

- Raghava Lawrence Politics: அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

- என் இனிய தமிழ் மக்களே… உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா!

- Director Bharathiraja : இயக்குனர் பாரதிராஜா மறைவு.!

- Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!
