சட்டப்பேரவை சர்ச்சை : அடுக்கடுக்கான விமர்சனங்கள்… ஆளுநர் தரப்பு கொடுத்த விளக்கம்..!

240 0
Governor RN ravi | தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரை குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது.

அரசாங்கத்தை பெரிதும் புகழ்ந்த வார்த்தைகளையே ஆளுநர் தவிர்த்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரம் விளக்கமளித்துள்ளது. மேலும் அவை விதிகளை மீறவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்து மற்றும் கூடுதல் வார்த்தைகள் சேர்த்தது குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது. அதில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது அவை மரபை மீறிய செயல் என்றும், ஆளுநர் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்குவது என்பது தீவிர விவாத பொருள் எனவும் தெரிவித்துள்ளது. மரபு மீறி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்பது ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்ட பிழை என்றும் தொழில் முதலீடு குறித்த விவரம் மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்பதால் தவிர்ப்பு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

செய்தி தாள்களில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பான செய்திகள் நாள்தோறும் வருகின்றன. தமிழ்நாடு அமைதியின் சொர்க்கம் என்பது எதார்த்தம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டது மாநிலத்தின் முயற்சியால் மட்டுமே நடந்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Post

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா… விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு

Posted by - September 8, 2025 0
விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சி: அரசியல் சதுரங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் காய் நகர்த்துகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம்…
Gemini Generated Image 4cdtsc4cdtsc4cdt

பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?

Posted by - April 3, 2026 0
பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன? தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில்,…

”உதயநிதிக்கு அமைச்சர் பதவி… சமூக அநீதி” – வானதி சீனிவாசன் விமர்சனம்

Posted by - December 17, 2022 0
பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது வாரிசு அரசியல் என்றும் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் விரிவாக அறிக்கை ஒன்றை…

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய ED? முடங்கும் SK-வின் பராசக்தி? தேர்தல் பரப்புரையாக வரும் “ஜனநாயகன்”

Posted by - May 19, 2025 0
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்திருக்கும் அமலாக்கத்துறை சோதனையால், விஜய்க்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நடந்திருக்கும் அமலாக்கத்துறை…

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

Posted by - July 24, 2025 0
கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *