ammk

அமமுகவில் இருந்து காமராஜ் எம்எல்ஏ நீக்கம் – தவெகவை ஆதரித்ததால் தினகரன் நடவடிக்கை

63 0

‘தவெகவுக்கு தன்னிச்சையாக ஆதரவளித்துள்ள அமமுகவின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காமராஜ், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டப்பேரவையில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.

எஸ்.காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ஆகவே, கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், எஸ்.காமராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - December 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…
annamalai

அமித்ஷா-வை சந்தித்த பிறகு பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை

Posted by - June 2, 2026 0
பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க அண்ணாமலை திட்டமா? சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக…
Generated Image January 07 2026 5 03PM 1

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - January 7, 2026 0
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…

பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை: அதிமுக தீர்மானம் முழு விவரம்..

Posted by - September 25, 2023 0
இன்று முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *