சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை புலாவ்

215 0

தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.வெந்தயக்கீரை புலாவ் | Methi Pulao in Tamil | Lunch Box Recipe | Pulao  Recipes | Healthy Food | - YouTube

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – ஒரு கப்,

வெந்தயக்கீரை- ஒரு கப்,

வெங்காயம் – 1 பெரியது,

உருளைக்கிழங்கு – 2,

பச்சை மிளகாய் – 3,

பிரிஞ்சி இலை – 1,

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,

நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கி, வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

அடுத்து அதில் அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். இப்போது சூப்பரான வெந்தயக்கீரை புலாவ் ரெடி.

Related Post

ராதிகா சரத்குமார் வீட்டில் நடந்த விசேஷம்… தனுஷ் உட்பட குவிந்த பல பிரபலங்கள்

Posted by - September 17, 2023 0
தமிழ் சினிமா துறையில் முக்கிய நட்சத்திர குடும்பமாக இருந்து வருகிறது ராதிகாவின் குடும்பம். ராதிகா, சரத்குமார் மற்றும் அவர் மகள் வரலக்ஷ்மி என பலரும் சினிமாவில் பிசியாக…

ஐபிஎல் 2024.. கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா.. மாதம் ரூ.222 மட்டும்.. Jio கிரிக்கெட் திட்டம்!

Posted by - March 19, 2024 0
ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் வேளையில் ஜியோ நிறுவனம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தட்டித்தூக்கும் திட்டங்களை கொடுக்கிறது.…

முதல் சீசனில் டி.என்.ஏ டெஸ்ட்… இதுல என்னவா இருக்கும்? பாரதி கண்ணம்மா 2 சீரியல் புது அப்டேட்!

Posted by - February 6, 2023 0
பாரதியாக புதிதாக களம் இறங்குகிறார் சிபு சூர்யன். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாராக இவர் செய்த சாகசங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சின்னத்திரை ரசிகர்களின் பேச்செல்லாம் பாரதி…

இந்த சீரியலும் முடிகிறதா.. சன் டிவி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்

Posted by - April 27, 2024 0
டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. அதற்காக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்கள் பலவும் முடிக்கப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்த…

நினைத்ததை சாதித்தோம் திமிரில் குணசேகரன், கடைசியில் ஷாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - October 6, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் மட்டும் எந்த ஒரு சீரியல் எடுத்தாலும் திருமணம் என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. அதில் வில்லன்களால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதும், ஹீரோ-ஹீரோயின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *