health 3

சர்க்கரை நோயாளிகள்.. பேரீச்சம் பழம் சாப்பிடலாமா.. பேரீச்சம்பழம் சாப்பிட்டால் என்னாகும்? அட ஆச்சரியம்

201 0

சென்னை:

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? இந்த பழத்தை சாப்பிட்டால் என்னாகும்?

தித்திப்பு நிறைந்த பழம் என்பதால், நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா? என்ற சந்தேகமும் தொடர்ந்து நிலவி வருகிறது.. சமீபத்தில், “நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன்” ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. அதன்படி, பேரிச்சம்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை கூறி ஆச்சரியத்தை கிளப்பியிருந்ததுசர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? ஒரு நாளைக்கு எத்தனை  சாப்பிடலாம்? | Can a diabetic patient eat dates? - Tamil BoldSky

ஆய்வுகள்:

வெறும், 100 கிராம் பேரீச்சம்பழத்தில் 311 கலோரிகள், 9 கிராம் நார்ச்சத்து, 1 முதல் 3 கிராம் புரதம் மற்றும் செலினியம், மெக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, பாஸ்பேட் ஆகிய நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாம்.. உலர்ந்த அடர் பழுப்பு பேரிச்சம்பழங்கள் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது என்கிறது அந்த ஆய்வு.. காரணம், 100 கிராம் பேரீச்சம்பழத்திற்கு 4.70 மி.கி. இரும்புசத்து இருக்கிறதாம்..

எனவே, பேரீச்சம்பழங்களை முற்றிலும் தவிர்க்க தேவையில்லையாம்.. மிதமான அளவில் சாப்பிடலாம் என்கிறார்கள். கார்போஹைட்ரேட்டுகளும் வைட்டமின்களும் இதில், உள்ளன..

சர்க்கரை நோயாளி:

எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழம்தான்.. இதில், கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது.. கிளைசெமிக் குறியீடு 42.8 முதல் 74.6 வரை உள்ளதுடன், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் ரத்த சர்க்கரையை உடனே கூட்டாது என்கிறார்கள்.

பொதுவாக, அதாவது, 55க்கு கீழ் ஜிஐ அளவிருக்கும் உணவுகள், ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க செய்யாது.. எனவே, இந்த பேரீச்சம் பழத்தின் ஜிஐ எண் 42 ஆகும்.. அதனால், இந்த பழத்திலிருந்து கிடைக்கும் சர்க்கரை சத்துக்கள், மெதுவாகவே ரத்தத்தில் கலக்க செய்கிறதே தவிர, திடீர்னு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது. தேவைப்பட்டால், மற்ற நட்ஸ்களுடன் சேர்த்து இந்த பழத்தை எடுத்து கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகள்:

இந்த பழத்தில் இன்னொரு பிளஸ் பாயிண்டும் உள்ளது.. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் மக்னீஷியம் அளவு குறைவாக இருக்கும் என்பார்கள். இதுபோன்றவர்களுக்கு பேரீச்சை உதவுகிறது. காரணம், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க பேரீச்சையில் உள்ள மக்னீஷியம் உதவுகிறது.

ஆனால், இதில் கலோரிகளும் மிக அதிகமாக உள்ளன.. அதாவது 100 கிராம் பேரிச்சம் பழத்தில் 314 கலோரிகள் இருக்கிறதாம். எனவே, சர்க்கரை நோயாளிகள் ஒன்றிரண்டு பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

Related Post

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. குரல் கொடுத்த விஜய், ஓடி ஒளிந்த கமல்

Posted by - December 27, 2024 0
தற்போது தமிழகமே அதிர்ச்சியில் இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவி பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார். இந்த செய்தியை தற்போது கடும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இதற்கு காரணமான ஞானசேகரன்…

ஓலா, ஊபர் போராட்டம் எதிரொலி: 20 கிலோமீட்டருக்கு ரூ.1000 கட்டணம் – பயணிகள் கடும் அதிர்ச்சி

Posted by - October 18, 2023 0
சென்னை: ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை…

வேங்கை வயல் சம்பவத்தில் பட்டியல் சமூக மக்களை திமுக ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 16, 2024 0
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யாமல் இருப்பதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

சிப்காட் தொழிற்சாலையில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப்படும் ஆலை கழிவுகளால் 10 கி.மீ. சுற்றளவுக்கு நீர் ஆதாரம் பாதிப்பு

Posted by - July 8, 2023 0
பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 2700 ஏக்கர் நிலம் பெறப்பட்டு இந்த…

இடைநிலை ஆசிரியர்கள் கைது – கண்டனம் தெரிவித்த தினகரன்

Posted by - February 22, 2024 0
சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *