தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணிக்கு மேல் தடை – காவல்துறை

224 0

வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2022 அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு சில அறிவுரைகளை கடைப்பிடிக்க காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 31:122022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள். மோட்டார் வாகனங்களில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடரஅறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்காக இரவு முழுவதும் நெடுஞ்சாலைக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள். வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் தவிர்க்கப்படும்.

கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதுகாவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தரும் பொதுமக்களின் இரகசியம் காக்கப்படும்.

அவசர உதவி தேவைப்படுபவர்கள் ‘காவல்’ உதவி’ என்ற அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், அதற்கு ‘காவல் உதவி’ செயலியை இன்றே பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்.

அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Post

”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை

Posted by - May 29, 2025 0
பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தவர் தான் அன்புமணி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸ்…
%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 %E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

Savukku Shankar: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த முதலமைச்சர் விஜய்.! காரணம் என்ன.?

Posted by - May 20, 2026 0
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. யூடியூப்பர்…

மெட்ராஸ் ஐ: அறிகுறியும்.. தற்காப்பு முறைகளும்.. Madras eye

Posted by - December 2, 2022 0
சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, ‘மெட்ராஸ் ஐ’. கண் வெண்படல அழற்சி…

நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

Posted by - September 20, 2023 0
தர்மபுரி: தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு,…
trihy

திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?

Posted by - June 3, 2026 0
Trichy nurse death Investigation report : திருச்சியில் செவிலியர் உயிரிழப்பு விவகாரத்தில் அறுவை சிகிச்சையின் போது தரமற்ற மருந்தை பயன்படுத்தியதே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *