“சினிமா விமர்சகர்களுக்கு படம் எடுக்குற அறிவு கிடையாது..! வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்!

205 0

விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னர் என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை ஆதிக்கம் செலுத்திய பிக் பாஸ், கடந்த 7 ஆண்டுகளாக தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்தாண்டு பிக் பாஸ் 7வது சீசன் நிகழ்ச்சி கடந்த 80 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். இப்போது வரை அர்ச்சனா, மாயா, விஜய் வர்மா, நிக்சன், பூர்ணிமா ஆகியோர் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.

Bigg Boss Tamil Season 7 10th December 2023 Promo 1 0 4 screenshot edited

 

இந்நிலையில், இந்த வாரத்துக்கான சனி, ஞாயிறு எபிசோட்களை கமல்ஹாசன் ஹோஸ்ட் செய்து வருகிறார். முன்னதாக இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று வந்தனர். அவர்கள் போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்களை சொன்னதோடு, சில விமர்சனங்களையும் முன் வைத்தனர். அதுகுறித்து கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களிடம் கருத்து கேட்டார். அப்போது பலரும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு போட்டியில் நன்றாக விளையாடுவோம் என்றனர்.

 

அதனை வரவேற்ற கமல்ஹாசன், “விமர்சனங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டாம், அது ஒரு கருத்து மட்டுமே, உண்மையும் கிடையாது.” “இது நல்ல Feedback மட்டுமே… எந்த விமர்சனங்களாக இருந்தாலும், அதாவது கலை, இலக்கியம், இசை, சினிமா என எதுவாக இருந்தாலும் முக்கால்வாசி பேர்களுக்கு அந்த கலையில் பிராக்டிஸ் இருக்காது. நடன விமர்சகர்களுக்கு டான்ஸ் ஆடத் தெரியாது… சங்கீத விமர்சகர்களுக்கு முழுசா பாடத் தெரியாது… சினிமா விமர்சகர்களுக்கு ஒரு படத்த முழுசா டைரக்ட் பண்ற அறிவு இருக்காது..” என ஒரு போடு போட்டார்.

 

kamalhead1 1703400259 1

 

அதுமட்டும் இல்லாமல் படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களிடம் மைக்கை நீட்டி கேட்கப்படும் விமர்சனங்கள் தான் உண்மையான் ரிசல்ட் என்றார். அதோடு பப்ளிக் விமர்சனம் பற்றி இமிடேட் செய்து காட்டியதும் அரங்கமே அதிர்ந்தது. இப்படி நெகட்டிவாக விமர்சனங்கள் கிடைத்த எனது படங்கள் நன்றாக ஓடியது எனவும் கமல் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Post

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

Posted by - December 13, 2024 0
பிக் பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா…

சன் டிவி சீரியலுக்கு முன் தோற்றுப் போய் நிற்கும் விஜய் டிவி..

Posted by - August 27, 2024 0
மக்களின் பொழுதுபோக்காக சின்னத்திரை மூலம் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் முதலிடத்தில் சன் டிவி சீரியல்கள் தான் மக்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறது. இருந்தாலும் விடாமுயற்சியுடன் விஜய் டிவி தொடர்ந்து…

சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை புலாவ்

Posted by - April 12, 2023 0
தினமும் ஒரு கீரையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கப், வெந்தயக்கீரை- ஒரு…

ஜி.பி முத்து மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - April 15, 2023 0
டிக்டாக் பிரபலமான ஜிபிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் பிரபலம் ஜிபிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க்டாக் மூலம்…

தினேஷ் – விசித்ரா மோதல்! ஷூட்டிங்கில் நடந்த பெரிய பிரச்சனை.. வெளியேறிய விசித்ரா

Posted by - January 30, 2024 0
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ அண்டா காகசம் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் 7 போட்டியாளர்களை தான் ஷோவுக்கு கொண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *