‘சேட்டன் வந்தெல்லே..’ வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!

440 0

‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.

‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது.

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த படத்தின் ‘மனசிலாயோ’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  இந்த பாடலின் சிறப்பம்சமாக மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டுவந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம், 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் மலேசியா வாசுதேவனின் குரல் இடம்பெறுகிறது.

பாடலின் தொடக்கமே மலையாள வரிகளில் துள்ளல் மிக்க இசையுடன் உள்ளது. துள்ளல் மிக்க இசைக்கேற்ற வரிகளும் பாடல் முழுக்க இடம்பெற்றுள்ளன. கூடவே, ரஜினி, மஞ்சு வாரியர் அசத்தல் நடனமும். அனிருத் ரஜினியுடன் டான்ஸ் ஆடியுள்ளார்.

Related Post

ரீ என்ட்ரியில் மாஸ் காட்டும் பிரசாந்த்…..அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

Posted by - ஆகஸ்ட் 12, 2024 0
விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களை காட்டிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய சொந்த பிரச்சினை…
சத்தியவான் சாவித்திரி பட விழா சர்ச்சையில் கீர்த்தி சுரேஷ் விளக்கம்

கீர்த்தி சுரேஷ் விளக்கம்: மிஷ்கின் தொட்டது குறித்த சர்ச்சைக்கு பதில்

Posted by - நவம்பர் 19, 2026 0
கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளதன் மூலம், இயக்குநர் மிஷ்கின் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்…
s 1

தன் ஜாதி பெயரை கூறி பெருமையாக பேசிய நடிகர் பார்த்திபன்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Posted by - மார்ச் 17, 2026 0
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர், இயக்குனராக வலம் வருபவர் ஆர்.பார்த்திபன். சமீபத்தில் அவர் நடிகை த்ரிஷாவை பற்றி மேடையில் பேசியது பெரிய சர்ச்சை ஆனது. விஜய் உடன்…

ஆடலாமா மாமு கபடி கபடி கபடி.. ‘வாரிசு’ டெலீட்டட் சீன்..!

Posted by - மார்ச் 4, 2023 0
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் 50 நாட்களைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில்…

லியோ படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?. இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை

Posted by - ஜூலை 25, 2023 0
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன