ரீ என்ட்ரியில் மாஸ் காட்டும் பிரசாந்த்…..அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

305 0

விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இப்போது ரசிகர் கூட்டம் அதிகமாக இருந்தாலும் ஒரு காலத்தில் இவர்களை காட்டிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய சொந்த பிரச்சினை காரணமாக சினிமாவில் இருந்து விலகி விட்டார்.

ஆனாலும் ரீ என்ட்ரி கொடுத்து சில படங்களில் நடித்து வந்த நிலையில் பெரிய அளவில் அந்த படகங்கள் கை கொடுக்காமல் போய்விட்டது. இருந்த போதும் விடாமுயற்சியால் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரசாந்துக்கு அந்தகன் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் பார்வையற்ற பியானோ கலைஞர் ஆகாஷாக பிரசாந்த் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் முதல் நாளில் கிட்டத்தட்ட 60 லட்சத்திற்கும் அதிகமாக கலெக்ஷன் செய்திருந்தது.

அந்தகன்  கலெக்ஷன்

இதைத் தொடர்ந்து படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் கோடிகளில் வசூலை குவிக்க ஆரம்பித்தது. அதன்படி சனிக்கிழமை இரண்டாவது நாளில் 1.10 கோடி கலெக்ஷன் செய்திருந்தது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூல் இன்னும் சற்று அதிகரித்த 1.15 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. இதுவரை வெளியான படங்களில் பிரசாந்துக்கு நல்ல ஓபனிங் கொடுக்கும் படமாக அந்தகன் படம் அமைந்துள்ளது. அதோடு வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் சில காரணங்களினால் அப்போது பிரசாந்தால் தொடர்ந்து சினிமாவில் செயல்பட முடியாமல் போய் உள்ளது. ஆனால் அந்தகன் படத்தின் ரீ என்ட்ரி காரணமாக கண்டிப்பாக மீண்டும் விட்ட இடத்தை பிரஷாந்த் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது ‌

 

Related Post

பீட்சா பாய்ஸ் திரைப்படக் குழுவினர் மற்றும் இயக்குநர் பற்றிய செய்தி படம்

பீட்சா பாய்ஸ் திரைப்படத்தின் கதை மற்றும் முக்கிய விவரங்கள்

Posted by - நவம்பர் 21, 2026 0
பீட்சா பாய்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் இளைஞர்களின் வாழ்க்கை முறையையும் அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் பேசும் புதிய படைப்பாக உருவெடுத்துள்ளது. இயக்குநர் சேகர் கேசவ் சிரின் இயக்கத்தில்…

இதுவரை ப்ரீ புக்கிங்கில் லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - அக்டோபர் 10, 2023 0
லியோ விஜய் நடிப்பில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததே இல்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு லியோ படத்தை உலகளவில்…
Generated Image January 06 2026 11 06AM

சிவகார்த்திகேயனின் பராசக்தி பட சாட்டிலைட் உரிமையை வாங்கியுள்ள 2 தொலைக்காட்சி.

Posted by - ஜனவரி 6, 2026 0
வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் என அனைத்தும் வெளியாகி மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மாஸாக நடந்து…

நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - ஜூலை 10, 2023 0
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும்,…

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் அசோக் செல்வன்

Posted by - ஆகஸ்ட் 12, 2023 0
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன