Gemini Generated Image 7kw09j7kw09j7kw0

சொந்த டீமா? இல்லை சதி? ஜனநாயகன் லீக் பின்னணி என்ன?

143 0

#ஜனநாயகன் 
#JanaNayagan 
#ThalapathyVijay 
#Vijay 
#VijayFans   #JanaNayaganLeak
#MovieLeak 
#Piracy  #யார்பின்னணி 
#ShockNews 
#ViralNews 
#TrendingNow 
#BigBreaking 
#PoliticalTwist  
#LeakControversy 
#WhoLeaked 
#CinemaLeak 
#VijayMovieLeak  
#BreakingNews  
#TamilNews   #TVK
#TamilPolitics 
#Election2026 
#VijayPolitics 
#TNPolitics  
#Kollywood

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ஜனநாயகன் படத்தை விஜயின் குழுவினரே வெளியிட்டதாக எதிர்தரப்பு விமர்சிக்க தொடங்கியுள்ளது.

JanaNayagan Leak TVK Vijay:  தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம், சென்சார் பிரச்னை காரணமாக வெளியாகமால் உள்ளது.

இணையத்தில் கசிந்த ஜனநாயகன்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி படம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன், ஜனநாயகன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக இதுநாள் வரை அந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பது உறுதியாகாமல் உள்ளது. இந்நிலையில் தான், தயாரிப்பு தரப்பையும் படக்குழுவினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, ஒட்டுமொத்த ஜனநாயகன் திரைப்படமும் இணையத்தில் கசிந்துள்ளது. விஜயை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் இந்த செயலை செய்துள்ளதாக அவரது ஆதரவு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், தேர்தல் பரப்புரைக்கான உள்நோக்கத்துடன் விஜயின் தரப்பே படத்தை இணையத்தில் கசியவிட்டதாக எதிர்தரப்பினர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

 

விஜய் போட்ட திட்டம்:

முழு நேர அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக, எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தை அறிவித்தார். பணிகள் முழுமையாக முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருந்த நிலையில் வெளியான ட்ரெய்லர், படம் அதிரடியான அரசியல் களத்தில் உருவாகி இருப்பதை உணர்த்தியது. இதனை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருவதன் மூலம், வசூலில் பெரிய லாபம் ஈட்டுவதோடு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கான பரப்புரைக்கும் உதவும் என விஜய் திட்டமிட்டிருந்தார். படத்தின் போஸ்டர்களை தாண்டில் பாடல்களில் கூட அரசியல் நெடி சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாகவே திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாத சூழல் இதுநாள் வரை நீள்கிறது. இதனால் விஜய் தரப்பு சற்று கவலையிலேயே இருந்தது அனைவரும் அறிந்ததே.

ஜனநாயகன் கசிந்தது எப்படி?

தேர்தலுக்கு பிறகு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தயாரிப்பு தரப்பை தாண்டி சென்சார் குழுவினர் மட்டுமே ஜனநாயகன் படத்தை பார்த்து இருந்தனர். ஆனால், தற்போது திரைப்படம் முழுமையாக இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தயாரிப்பு தரப்புக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடும். இதையடுத்து படத்தை கசியவிட்டது யார்? படத்தின் தரவுகள் வெளிநபர்களுக்கு கிடைத்தது எப்படி? என பல கேள்விகள் எழுந்துள்ளன.

அரசியல் சதியா? விஜய் டீமின் ப்ளானா?

கரூர் சம்பவம், மனைவி சங்கீதா உடன் விவாகரத்து மற்றும் நடிகையுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டு போன்ற பல்வேறு விவகாரங்களால், விஜயின் அரசியல் பயணம் சற்றே வேகமிழக்க தொடங்கியது. இருப்பினும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், மாநிலம் முழுவதுமான தனது பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், அவரை மனதளவில் பலவீனமாக்கும் வகையில் எதிர்தரப்பினர் தான், திட்டமிட்டு ஜனநாயகன் படத்தை கசியவிட்டதாக தவெக தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இது அரசியல் சதி எனவும் சாடுகின்றனர்.

அதேநேரம், தனது தேர்தல் பரப்புரைக்காக ஜனநாயகன் படத்தின் காட்சிகளை பயன்படுத்துவதோடு, தனக்கான பரப்புரை ஆயுதமாகவும் உதவும் என கருதி விஜய் தரப்பே திட்டமிட்டு படத்தை கசியவிட்டதாக எதிர்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். படக்குழு மற்றும் சென்சார் குழு மட்டுமே பார்த்த திரைப்படத்தை, வெளிநபர்களால் எப்படி கசியவிட முடியும். எனவே உள்நோக்கத்துடனேயே ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது என, விஜயின் எதிர்தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதே உண்மை.

படக்குழு தீவிரம்..

சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படத்தின் காட்சிகளை பகிர்ந்த, சமூக வலைதள கணக்குகளை முடக்கும் பணிகளை தயாரிப்பு நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராகி வருகிறது. படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவது மட்டுமின்றி, ஆன்லைன் அல்லது தரவிறக்கம் செய்து பார்ப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எனவே, சட்ட நடவடிக்கைகள் தங்கள் மீது பாய்வதை தடுக்க, பொதுமக்கள் கவனத்துடனும், பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.

Related Post

டி எஸ் பி -திரைபார்வை

Posted by - December 2, 2022 0
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் டிஎஸ்பி. சேதுபதி, செக்க சிவந்த வானம் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படத்தில் காவல்…

திரிஷாவுடன் மட்டும் காமினேஷன் போட்டோஷூட்!..லியோ படக்குழுவை அறவே மதிக்காமல் சென்ற விஜய்!

Posted by - July 22, 2023 0
மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தின் மூலம் விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாம் முறையாக கூட்டணி வைத்துள்ளார். இதில் பல நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இதனால்…

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - June 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - May 5, 2023 0
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *