டெங்குக் காய்ச்சல் – பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

222 0

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவிற்கென்று பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பூந்தமல்லி கபாலி தெருவை சேர்ந்த ராஜ் பாலாஜி என்ற சிறுவன், குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜ் பாலாஜி மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் சற்று குறைந்து வந்த நிலையில், உடலில் உப்பு அதிகமாக இருந்ததால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுவன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் நீடித்தால் காலம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு சென்று உரிய  பரிசோதனை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

“நான் போகாத ஜெயிலே இல்லை.. இன்னும் என்னை காதலிக்கிறார்கள்..” வரிச்சியூர் செல்வம்..!

Posted by - February 16, 2023 0
பாஜகவில் இருந்து விலகிய சூர்யா சிவா தன்னை ரவுடி என்று அழைத்தது வருத்தமாக இருப்பதாக வரிச்சியூர் செல்வம் கூறியுள்ளார்.நடமாடும் நகைக்கடை என்று அழைக்கப்படும் வரிச்சியூர் செல்வம், தனக்கும்-…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

Posted by - January 1, 2023 0
தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசின்…

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார்: தொண்டர்கள், ரசிகர்கள் கண்ணீர்

Posted by - December 28, 2023 0
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள்…

தமிழக முதல்வர் – ட்ரெண்டிங் ஹாஸ்டாக்குடன் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்..!!

Posted by - March 1, 2024 0
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரிலும்,தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள்…

லைவ் அப்டேட்ஸ்: செப்.15ல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை – பட்ஜெட்டில் அறிவிப்பு .

Posted by - March 20, 2023 0
வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும். பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் ரூ.485 கோடியில் மேம்படுத்தப்படும். சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *