தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

197 0

கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே, இபிஎஸ்ஸையும் சேர்த்துச் சாடுகிறார். அவரது இந்த திடீர் பாய்ச்சலுக்கும் காரணம், தவெக உடனான தனது கூட்டணிக் கனவு சிதைந்து விடுமோ என்ற ஆதங்கம் தான் என்கிறார்கள்.

“கரூர் சம்பவத்துக்கு விஜய் தார்மிக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அது குற்றத்தை ஏற்பது ஆகாது. இதில் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார். ஸ்டாலின் அனுபவமிக்க தலைவராக உள்ளார்” என்று விஜய்யை விமர்சித்து முதல்வரை பாராட்டிய தினகரன், “கரூர் சம்பவத்தை வைத்து தவெகவுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.உயிரிழப்பு நேரத்தில் நரித்தனமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை கண்டிக்கிறோம். தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவரவே ஆளுங்கட்சி மீது பழனிசாமி பழி போடுகிறார்” என்று சொன்னதிலிருந்தே அவரது ஆதங்கத்திற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.பாஜக கூட்டணியை விட்டு தினகரன் வெளியேறிவிட்ட நிலையில், அவரால் திமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது. அவருக்கு இருக்கும் ஒரே கூட்டணி கதவு தவெக தான். அந்த நம்பிக்கையில் தான், தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, “எதுவும் நடக்கலாம்” என்று முன்பு சொல்லி வந்தார்.

இந்த நிலையில், கரூர் சம்பவத்தை முன்வைத்து விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என இப்போது பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த இபிஎஸ்ஸுக்கு தவெகவினர் கட்சிக் கொடிகள் சகிதம் வந்து வரவேற்பு கொடுத்தார்கள். தருமபுரி தொகுதியில் விஜய் படத்தை போட்டு பழனிசாமிக்கு ஃபிளெக்ஸ் வைத்திருந்தார்கள். விஜய்யை இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக வரும் செய்திகளையும் இருதரப்பிலும் மறுப்பார் இல்லை.

இப்படி, கரூர் சம்பவத்தில் தங்களுக்கு ஆதரவாக நிற்கும் அதிமுகவுடன் இயல்பாகவே தவெக கூட்டணி அமையக் கூடிய சூழல் உருவாகி வரும் நிலையில், அது நடந்தால் தனக்கு இருக்கும் ஒரே வாய்ப்பும் அடைபட்டுப் போய்விடும் என்று தினகரன் கருதுகிறார். பாஜக இல்லை என்றால் தவெகவுடன் போய்விடலாம் என அவர் தெம்பாக இருந்த நிலையில், தவெக கூட்டணிக்கு அதிமுக முயல்வது அவரை பதற்றம் கொள்ள வைத்திருக்கிறது.

Related Post

Generated Image January 08 2026 10 50AM

ஜனநாயகன் பிரச்னை – காங்கிரஸ் அட்டாக்

Posted by - January 8, 2026 0
ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சார படங்கள் என போற்றப்படுவது ஏன்? என விஜயின் ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை குழுவும் பாஜகவால் ஆயுதமாக…
w 2

விஜய் பற்றி விசாரித்த முதல்வர்: நிர்வாகிகள் கைகலப்பு

Posted by - March 19, 2026 0
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை…
qwefghm

’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்

Posted by - March 17, 2026 0
உள் பாவாடை கிடையாதா? சிவி சண்முகத்தை அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து நடைபெற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்,…
ops 2

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

Posted by - February 27, 2026 0
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…
fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

Posted by - May 8, 2026 0
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *