தமிழுக்கு வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ நடிகர்.. பா.ரஞ்சித் தயாரிப்பில் புது படம்.!

200 0

ரஞ்சித் கிளாப் அடித்துப் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அவரது பிற தயாரிப்புகள் போல் இதுவும் விளிம்புநிலை மக்களைக் குறித்துப் பேசுவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இவர்கள் தயாரிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ஊர்வசி, தினேஷ் நடித்திருக்கும் ஜெ பேபி திரைப்படம் வரும் மார்ச் 8 ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தங்களின் அடுத்தத் தயாரிப்பை இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது நீலம் புரொடக்ஷன்ஸ். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, ரஞ்சித்தின் உதவி இயக்குநர் அகிரன் மோசஸ் படத்தை இயக்குகிறார். ஜீ.வி.பிரகாஷே படத்துக்கு இசையமைக்கிறார். நாயகியாக ஷிவானி ராஜசேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இவர்களுடன் பசுபதி, லிங்கேஷ் உள்ளிட்டவர்களம் நடிக்கிறார்கள். அத்துடன், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் விழும் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீநாத் பாஸி இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் தொடங்கியது. ரஞ்சித் கிளாப் அடித்துப் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அவரது பிற தயாரிப்புகள் போல் இதுவும் விளிம்புநிலை மக்களைக் குறித்துப் பேசுவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கேற்ப சென்னை ஹவுஸிங்ஃபோர்ட் பகுதியில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்துக்கு ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்புப் பணிகளை செல்வா ஆர்.கே. கவனிக்கிறார்.

Related Post

Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

Posted by - December 26, 2023 0
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு…

ரசிகர்களுக்கு செம ட்ரீட்… வெளியானது AK62 டைட்டில்…

Posted by - May 1, 2023 0
அஜித் குமாரின் 62-வது படத்தின் டைட்டில் மற்றும் இயக்குநர் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது.…

அந்தப் படத்தில் நான் ஹீரோ.. யாருக்கும் தெரியாது.? செந்தில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Posted by - December 20, 2023 0
80,90 ஹீரோ இல்லாமல் கூட படம் எடுத்து விட முடியும் ஆனால் கவுண்டமணி, செந்தில் இல்லாமல் படமே எடுக்க முடியாது அந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.…

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

Posted by - August 21, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன்…

விஜய்யின் 3 மணிநேர ஆக்சன் ட்ரீட்.. வெளிவந்த கோட் முதல் விமர்சனம்

Posted by - September 2, 2024 0
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போது ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பாக இருக்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *