தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

258 0

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி: தனது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தனது பிறந்தநாளையொட்டி குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார். அதைத்தொடர்ந்து, சிஐடி காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு செல்லும் முதல்வர், அங்கு கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.

பின்னர், சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் காலை உணவு முடித்துவிட்டு, அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.

Related Post

இன்று பிறந்த நாள்… மோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்; பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட்டம்!

Posted by - September 17, 2024 0
புதுடில்லி: இன்று 74வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பிறந்த நாள்…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்

Posted by - September 15, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய…

நித்தியானந்தவின் புதிய திட்டம்

Posted by - February 16, 2023 0
புதுடெல்லி: சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார். இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர்…

10 ஆண்டுகள் நிறைவு செய்த யுபிஐ – நடப்பு நிதியாண்டில் 314 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனை!

Posted by - May 1, 2026 0
பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள யுபிஐ பணப்பரிவர்த்தனை, நடப்பு நிதியாண்டில் மட்டும் 314 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. யுபிஐ அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *