தமிழ்நாடு ஆளுநர், இலச்சினை.. திருவள்ளுவர் ஆண்டு.. ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்

430 0

வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ் பேசுபொருளாகியுள்ளது.

சென்னையில் ஜனவரி 4ஆம் தேதி நடந்த நிகழ்வு ஒன்றில், “ தமிழ்நாடு என கூறுவதை விட தமிழகம் என சொல்வதே பொருத்தமாக இருக்கும்” என ஆளுநர் பேசியது சர்ச்சையானது. அதற்கு பிறகு ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவுக்காக அனுப்பிய அழைப்பிதழ் மீண்டும் சர்ச்சையானது.

ஆளுநர் மாளிகையின் அந்த பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது. ஆளுநர் மாளிகையின் அந்த அழைப்பிதழுக்கு பல்வேறு கட்சிகளும் தங்களது கண்டனங்களை தெரிவித்தன.

இந்த தமிழ்நாடு சர்ச்சை குறித்து  டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி அடங்கிய குழுவினர் குடியரசு தலைவரை சந்தித்து ஆளுநரின் போக்கை எதிர்த்து மனுவை வழங்கினர். இதற்கு பிறகு டெல்லி சென்றார் ஆளுநர். ஆளுநர் தரப்பிலிருந்து தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து விளக்க கடிதமும் வந்தது. அதில் தான் தமிழகம் என குறிப்பிடலாம் என சொன்னதை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என விளக்கமளித்தார் ஆளுநர்.

WhatsApp Image 2023 01 23 at 6.45.11 AM

ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்
WhatsApp Image 2023 01 23 at 6.45.12 AM

ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்

You May Like

Related Post

பிடிஆர் வசமாகும் 2 முக்கிய இலாகாக்கள்..! ஸ்டாலின் புது கணக்கு – ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?

Posted by - April 25, 2025 0
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…

கொலை… கொள்ளை… வழிப்பறி – என்னாச்சு சட்டம்-ஒழுங்கு?

Posted by - September 13, 2023 0
திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின்…

+2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் – அட்டவணை

Posted by - May 8, 2025 0
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், உடனடியாக துணை தேர்வு எழுதுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி…
vijay cm tn

TN Speaker: சபாநாயகர் பதவியை தக்கவைக்குமா தவெக? விஜய்க்கு காத்திருக்கும் முதல் சவால்?

Posted by - May 10, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில், சபாநாயகர் பதவியை தவெக தங்கள் வசம் தக்கவைக்குமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக…

ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *