10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை – பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

191 0

போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது :தமிழகத்தில் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு ஒரு குடிகாரரை உருவாக்கிய நிலையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது. 1972ம் ஆண்டு முந்தைய தலைமுறை மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தது. அடுத்து வந்த 52 ஆண்டுகளில் சில ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் மது ஆறாக ஓடி 3 தலைமுறைகளை பாதித்துள்ளது.

போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை. இந்த அதிகாரிகளுக்கு இந்த உத்யோகம் தேவையா? டிஎன்பிஎஸ்சி குருப் 4 போட்டித்தேர்வில் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் காலி பணியிடங்கள் 480 உயர்த்தி இருப்பது போதுமானது இல்லை.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், அத்தொகை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதை வழங்காமல் தாமதிப்பது நியாயமல்ல. மகளிர் உரிமை தொகை வழங்க இவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.தமிழகத்தின் நகர்புறப்பகுதிகளில் 6 சதவீத சொத்துவரி உயர்த்த நகராட்சி நிர்வாகத்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது . ஏற்கனவே 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டது. மேலும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே சொத்துவரி உயர்த்தப்பட்டால் பாமக மாபெரும் போராட்டத்தை நடத்தும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

Related Post

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 %E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81

’’வீர வசனம் வேணாம்; ஆசிரியர்களுக்கு உடனே பாதுகாப்பு குடுங்க’’- அரசை அட்டாக் செய்த அன்பில் மகேஸ்

Posted by - May 30, 2026 0
ரீல்ஸ் அரசாகத் திகழும் இன்றைய தமிழ்நாடு அரசு வீரவசனம் பேசி அனைத்தையும் வேடிக்கை பார்க்காமல், உடனடியாக நம்முடைய ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டும்- அன்பில் மகேஸ். ஆசிரியப் பெருமக்களைப்…

கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்: 10-ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Posted by - February 16, 2023 0
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பாதிப்படைந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்சலாக ஐகோர்ட்டை நாடினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும் ஒப்பிட்டு…

இன்று 11 மாவட்டங்களுக்கு கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

Posted by - December 11, 2022 0
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு…
sslc tn

TN 10th Result : அறிவியலில் சென்டம் அதிகம்.. வியப்பை ஏற்படுத்திய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Posted by - May 20, 2026 0
Tamil Nadu 10th Result 2026 Centum Scorers: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வுகளை 4,35,247 மாணவியர்களும், 4,35,396 மாணவர்களும் என மொத்தம் 8,70,643 மாணாக்கர்கள் எழுதினர்.…

முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை

Posted by - November 30, 2023 0
சென்னை: கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *