“தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

133 0

சென்னை: “நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?” என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன?

இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரச்சாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் தவெகவுக்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் திமுக ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

Related Post

Generated Image November 24 2025 10 34AM

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி

Posted by - November 24, 2025 0
ஒவ்வொருவருக்கும் நிரந்த வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார் நிச்சயம் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார் மீண்டும் மக்களை சந்தித்த விஜய்…
Gemini Generated Image t4hwvit4hwvit4hw

500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

Posted by - March 30, 2026 0
தங்கம், வெள்ளி, பணம், கார்கள்… தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196)…
tvk

தவெக வீழ்த்தும் அதிமுக விக்கெட்டுகள்… விஜய்யின் ‘பாய்ச்சல்’ அரசியல் இலக்கு என்ன?

Posted by - May 26, 2026 0
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகி இருப்பது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக மட்டுமின்றி, ‘இது குதிரைபேர…

இன்னும் சிறிது நேரத்தில் குட் நியூஸ்.. ஆசிரியர்களுக்கு சம ஊதியம்- அமைச்சர் பேச்சுவார்த்தை!

Posted by - January 5, 2026 0
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் இன்று 05.01.2026 பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சம வேலைக்கு சம…
vijay 3

திருச்சியில் பின்னடையும் விஜய்.! பெரம்பூரில் முன்னிலை.! லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

Posted by - May 4, 2026 0
Tamil Nadu Election Results 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் முன்னிலையிலும், திருச்சி கிழக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *