தவெக மாநாடு : விக்கிரவாண்டியில் குவியும் தொண்டர்கள்… இத்தனை சிறப்பு ஏற்பாடுகளா?

171 0

தவெக மாநாட்டிற்கு வருபவர்களின் மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக் குழுவுடன், 17 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தவெக மாநாட்டு திடலில், குடிநீர், கழிவறை, செல்போன் சிக்னல் கிடைக்க டவர், எல்இடி திரைகள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தவெக மாநாட்டிற்காக காவல்துறையிடம் அனுமதி பெற்றபடி, தொண்டர்கள் அமர 40 கேபின்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டுத் திடலில் 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டை சிரமமின்றி காணும் வகையில், மாநாட்டு பந்தல் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் 300 மொபைல் கழிவறைகள் மற்றும் 700 குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.மாநாட்டு திடலுக்கு உள்ளே செல்ல 3 வழிகள், வெளியே செல்ல 10க்கும் மேற்பட்ட வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதால், மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக் குழுவுடன், 17 மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த பிரமாண்ட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 152 ஏக்கரில் பேருந்துகளையும், 127 ஏக்கரில் வேன், கார் உள்ளிட்ட வாகனங்களையும் நிறுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

மின்வாரிய ஊழியர்களை தாக்கிய திமுகவினர் : அண்ணாமலை கண்டனம்!

Posted by - April 22, 2025 0
மின்வாரிய ஊழியர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்…

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்! : வானதி சீனிவாசன்

Posted by - April 10, 2024 0
‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் அனைத்து மதத்தினரின் நலன்களையும் பாதுகாப்பவர்கள். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 1500-க்கும் அதிகமான…

Pongal Gift: பொங்கல் தொகுப்பு – என்னென்ன பொருட்கள் கொடுக்கப்படும்? கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு

Posted by - December 13, 2024 0
இனிப்பு பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசி பருப்பு, உலர் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 8 பொருட்கள் ரூ.199/-…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *