திக்குமுக்காட செய்த தமிழ்நாடு பட்ஜெட்..! எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? பள்ளிக்கல்வித்துறை டாப்..!

124 0

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பட்ஜெட்:

தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நடப்பு திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி, பல புதிய திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. தொழில் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் போக்குவரத்து துறைக்கு முன்னுரிமை அளித்து பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

துறைசார் நிதி ஒதுக்கீடு:

  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு என 29 ஆயிரத்து 465 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 26 ஆயிரத்து 678 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • பள்ளிக்கல்வித்துறைக்கு  46 ஆயிரத்து 767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • உயர்கல்வித்துறைக்கு 8 ஆயிரத்து 494 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • சமுக நலன் மற்றும் மகளிர் நலன் துறைக்கு 8 ஆயிரத்து 597 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.572 கோடி நிதி ஒதுக்கீடு
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறைக்கு 21 ஆயிரத்து 906 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு 3 ஆயிரத்து 915 கோடி நிதி ஒதுக்கீடு
  • சிறுகுறு தொழில் துறை மேம்பாட்டிற்கு  ஆயிரத்து 918 கோடி நிதி ஒதுக்கீடு
  • எரிசக்தி துறைக்கு மொத்தமாக 21 ஆயிரத்து 168 கோடி நிதி ஒதுக்கீடு
  • போக்குவரத்து துறைக்கு 12 ஆயிரத்து 964 கோடி ரூபாய்நிதி ஒதுக்கீடு
  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ஆயிரத்து 975 கோடி நிதி ஒதுக்கீடு
  • தகவல் தொழில்நுட்பவியல்  மற்றும் டிஜிட்டல் சேவைகள்  துறைக்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு
  • நீர்வளத்துறைக்கு 9 அயிரத்து 460 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • எரிசக்தி துறைக்கு 21 அயிரத்து 178 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறைக்கு 3 ஆயிரத்து 924 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆயிரத்து 563 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஆயிரத்து 433 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறைக்கு ஆயிரத்து 980 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு 7 ஆயிரத்து 718 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • பொதுப்பணித்துறைக்கு 2 ஆயிரத்து 457 கோடி நிதி ஒதுக்கீடு

Related Post

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | உங்கள் பெயர் உள்ளதா? முழு விவரம்

Posted by - December 19, 2025 0
தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

Posted by - November 30, 2024 0
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் ரஜினி எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது…

திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது

Posted by - July 11, 2023 0
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற…

இறுதி மூச்சு வரை ஸ்டாலின் தான் முதல்வர்.. நாக்கை நீட்டி வாக்கு சொன்ன அமைச்சரால் சிரிப்பலை

Posted by - December 17, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் நிரந்தர முதலமைச்சர் என்றும், அவர் இறுதி மூச்சுவரை முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். இறுதி மூச்சு உள்ள வரை…

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

Posted by - February 7, 2024 0
நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *