sdbi

திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.!

145 0

தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது.

நெருங்கும் தேர்தல்- தொகுதி பங்கீடு தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. எனவே தேர்தல் பணிகளை ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் தொடங்கியுள்ளது. இதற்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியானது 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மமக., மநீம உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது.

திமுக கூட்டணியில் SDPI

இந்த நிலையில் தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக மாறி வரும் நிலையில், தற்போது தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவிகிதத்தை கொண்டுள்ள SDPI கட்சியானது திமுக கூட்டணியில் இடம்பெறவுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட SDPI திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளதால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய SDPI  திமுக கூட்டணியில் இணையவுள்ளது.

SDPI-கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து SDPI  தலைவர் நெல்லை முபாரக் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று திமுக,  கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு  பேச்சுவார்த்தையில்  பங்கேற்க SDPI கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. எனவே இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்  தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பட்டியலை SDPI கட்சி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் SDPI கட்சிக்கு 2 அல்லது 1 தொகுதியானது ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

jhgtrew

ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

Posted by - April 17, 2026 0
TVK Election Manifesto 2026: தவெக முதல் தேர்தல் அறிக்கை நேர்மையின் உத்தரவாதம் என சொல்லலாம். ஸ்டாலின் சார் மாதிரி ஏமாற்ற மாட்டோம். மற்றும் பலர் மாதிரி…

விஜயை மட்டும் விடாமல் அடிக்கும் சீமான்.. அண்ணனுக்கே ஆபத்தா?

Posted by - September 15, 2025 0
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து விஜய்யை மட்டும் எல்லை மீறி விமர்சித்து வருவது அவருக்கே பின்னடைவாகும் ஆபத்து உள்ளதாக அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ்நாட்டில்…
Generated Image November 27 2025 10 12AM

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்

Posted by - November 27, 2025 0
Vijay  vs Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும்…

97.37 லட்சம் பேர் பெயர் நீக்கப்பட்டது

Posted by - December 20, 2025 0
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR) பணிக்குப் பிறகு, மாநில முழுவதும் 97,37,832 பேர் வழக்கமான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் புதிய…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *