vijay sangeetha

மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா !

133 0

நடிகர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவாக தவெக ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்

நடிகர் விஜய் பிரபல நடிகையுடன் திருமணம் கடந்த உறவில் இருந்து வருவது ரசிகர்கள் அனைவரும் அறிந்த விஷயமே. இப்படியான நிலையில் விஜயின் மனைவி விஜயிடம் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர் சங்கீதா என்றபோதிலும் தவெக ஆதரவாளர்கள் விஜயை தியாக சித்தரித்து பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார்கள். இந்த பதிவுகள் பார்ப்போருக்கு எரிச்சலையே ஏற்படுத்துகின்றன.

விஜயுடன் 26 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தனது கணவர் விஜய் பிரபல நடிகை ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்து வருவதாக சங்கீதா இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். விஜய் அந்த நடிகையுடன் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஒன்றாக பயணித்ததாகவும் அந்த நடிகை விஜயுடன் தனது புகைப்படங்களையும் பதிவிட்டதாகவும் இந்த மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனையை பேசி தீர்க்க நினைத்த சங்கீதாவை விஜய் புறந்தள்ளி வைத்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்து லண்டனில் சங்கீதா தனியாக வசித்து வந்துள்ளார்.

கள்ள உறவை கொண்டாடிய ரசிகர்கள்

விஜய்க்கும் பிரபல நடிகை ஒருவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் வெளியான போது அவரது ரசிகர்கள் இந்த உறவை ஆதரிக்கவே செய்தனர். இருவரது புகைப்படங்களை பகிர்ந்து கபிள் கோல்ஸ் மீம்ஸ் வெளியிட்டார்கள். இருவரையும் ஐடலைஸ் செய்தார்கள். காதலிப்பது விஜயின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும் இந்த விஷயத்தில் விஜயின் மனைவி சங்கீதாவின் மனநிலையையை யாரும் பொருட்படுத்தவில்லை.

விஜயை தியாகியாக்கும் தெவக ஆதரவாளர்கள்

தற்போது விஜயின் மீது குற்றசாட்டுகளை வைத்து சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில் இது விஜய்க்கு எதிரான சதியாகவே பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் விஜய்க்கு எதிராக அவரது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குள்ளாவது அரசியல் சதியாக பார்க்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அதற்காக விஜயை உத்தரமாக்க தேவையில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் தனது மனைவியை அவர் ஒரு சராசரி ஆணாகவே நடத்தியிருக்கிறார். மேலும் 4 ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு இப்போ ஏன் இதை சொல்றீங்க என பாதிக்கப்பட்ட சங்கீதாவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது அபத்தத்தின் உச்சம்.

திருமணம் கடந்த உறவில் இருந்த விஜயை தியாகியாக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகளை காணமுடிகிறது. 41  பேர் உயிரிழந்தபோதே முட்டுக்கொடுத்த இந்த கூட்டம் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்ப்பது நம்முடைய முட்டாள்தனம் தானோ?

Related Post

பா.ம.க.வில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி

Posted by - September 11, 2025 0
விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய…
s 5 e1774010119419

”ஒரு கதை நியாபகம் வருகிறது’ திமுக குறித்து அதிமுக சொன்னது என்ன ?

Posted by - March 20, 2026 0
டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புலம்ப ஆரம்பித்துவிட்டதாக, அதிமுக காட்டமாக விமர்சித்துள்ளது. ADMK Vs Stalin: காங்கிரசின் மிரட்டல்களுக்கு பணிந்தே திமுக கூடுதல் தொகுதிகளை…
tvk vijay e1777957622993

TN Election Result 2026: சென்னையின் 16 எம்.எல்.ஏக்கள் யார்? வாக்கு வித்தியாசம்? மிகப்பெரிய, சிறிய வெற்றியாளர்கள்

Posted by - May 5, 2026 0
TN Election Result 2026 Chennai MLAs: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் விவரங்கள் கீழே…

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - October 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…

தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது

Posted by - September 25, 2025 0
அடுத்த ஆண்டு தேர்தலுக்கான களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திற்கத் தான் போட்டி நடப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *