vijay

விஜய்-சங்கீதா விவாகரத்து!

124 0

நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!

“விஜய் நடிகையுடன் திருமணம் தாண்டிய உறவில் விஜய் இருந்ததாக, அவரது மனைவி சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.”

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 1998-ல் லண்டனில் பதிவுத் திருமணமும், 1999-ல் சென்னையில் இந்து முறைப்படி சடங்குகளுடனும் இவர்களது திருமணம் நடைபெற்றது.

25 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஆரம்ப காலங்களில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில், கடந்த 2021-ம் ஆண்டு முதல் விரிசல் ஏற்படத் தொடங்கியதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகையுடன் தொடர்பு

சங்கீதா தனது மனுவில், 2021 ஏப்ரல் மாதம் முதல் எதிர்மனுதாரர் (விஜய்) ஒரு நடிகையுடன் கொண்டுள்ள நெருக்கமான தொடர்பே குடும்பப் பிளவுக்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தனக்கு மிகுந்த மன உளைச்சலையும், ஏமாற்றத்தையும் அளித்ததோடு, பொதுவெளியில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அந்த நடிகை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் தங்களையும் பிள்ளைகளையும் பாதித்ததாகக் கூறியுள்ளார்.

உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும்

கடந்த 2021 முதல் விஜய் தன்னை உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புறக்கணித்து வருவதாகவும், தற்போது ஒரே வீட்டில் இருந்தாலும் இருவரும் தனித்தனியாகவே வாழ்வதாகவும் (Constructive Desertion) அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாகரத்து வழக்கில், தங்களுக்கு இடையேயான திருமணத்தை முறைப்படி ரத்து செய்ய வேண்டும் என்றும், தனது அந்தஸ்துக்கு ஏற்றவாறு நிரந்தர ஜீவனாம்சம் (Permanent Alimony) வழங்கப்பட வேண்டும் என்றும் சங்கீதா கோரியுள்ளார்.

மேலும், இறுதித் தீர்ப்பு வரும் வரை தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்திலேயே தங்கியிருக்க அனுமதி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். குடும்பத்தின் நற்பெயர் மற்றும் பிள்ளைகளின் நலனைக் கருதி, இந்த வழக்கின் விசாரணையை ரகசியமான முறையில் (In-camera proceedings) நடத்த வேண்டும் என்றும், ஊடகங்கள் இது குறித்து விவாதிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.Vijay–Sangeetha Divorce Reason Behind Separation Allegations Petition Details TNN Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!

Related Post

ICUவில் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்- ஆனாலும் அவர் செய்த வேலை, வாழ்த்தும் மக்கள்

Posted by - December 11, 2023 0
அறந்தாங்கி நிஷா திருமணத்திற்கு பின் ஒரு பெண் ஜெயிக்கிறாள் என்றால் அவருக்கு துணையாக அவரது கணவர் இருக்கிறார் என்பது தான் உண்மை. அவரது உதவி இல்லாமல் ஒரு…
court

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Posted by - December 5, 2023 0
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி…

உருவானது சக்கரம்.. 4 நாளில் புயல்?! வெளுக்கும் மழை-வெதர்மேன்!

Posted by - December 4, 2022 0
தமிழக கடற்கரைரையை நோக்கி இந்திய சீன பகுதியில் இருந்து வரும் சக்கரம்  நான்கு நாட்கள் கழித்து நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக வெதர்மேன் அப்டேட் போட்டுள்ளார். இந்தோ-சீனா பகுதியில் இருந்து உருவாகி…

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

கொலை… கொள்ளை… வழிப்பறி – என்னாச்சு சட்டம்-ஒழுங்கு?

Posted by - September 13, 2023 0
திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *