தினமும் நள்ளிரவிற்கு பின் தூங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா..? எதுக்கும் எச்சரிக்கையா இருங்க!

279 0

தினமும் நள்ளிரவுக்கு பின் தூங்குவதை பழக்கமாக கொள்ளும் பொழுது நமது உடலின் இயற்கை சர்க்காரின் கடிகாரம் சீர்குலைக்கப்பட்டு, அதனால் ஹார்மோன் வெளியீடு, வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் வெப்பநிலை போன்ற அத்தியாவசிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது.

நமது அன்றாட தூக்க வழக்கத்தில் சரியான தூங்கும் பயிற்சிகளை கடைபிடிப்பதன் வாயிலாக, தூக்கத்தை மீட்டெடுக்கக்கூடிய மற்றும் ஆரோக்கியமான அனுபவத்தை ஊக்குவிக்கும் தூக்கமாக மாற்றலாம். உலகம் முழுவதும் இப்பொழுது கேட்ஜெட்டுக்கு அடிமையாகி விட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. பலர் வேலையை விட்டு வீடு திரும்பியவுடன் கைகளில் மொபைல் அல்லது லேப்டாப் வைத்து பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதனால் சரியான தூங்கும் நேரத்தை அவர்களால் கடைபிடிக்க முடியாமல் போகிறது.

இதன் விளைவாக அவர்கள் தினமும் நள்ளிரவுக்கு பின் தூங்குவதை பழக்கமாக்கி கொள்கின்றனர். ஆனால் உண்மையில் இதன் பின்னணியில் இருக்கக்கூடிய விளைவுகள் ஏராளம். என்றாவது ஒரு நாள் நள்ளிரவுக்கு பின் தூங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் தினமும் தாமதமாக தூங்குவதால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் மனச்சோர்வு பைபோலார் கோளாறுகள் உட்பட பல்வேறு விதமான மன ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட கோளாறுகளுடன் தொடர்புடையதாக அமைகிறது. தினமும் தாமதமாக தூங்குவதால் ஏற்படக்கூடிய நாள்பட்ட பிரச்சனைகள் சிலவற்றை பற்றி பேசலாம்.

  • தினமும் நள்ளிரவுக்கு பின் தூங்குவதை பழக்கமாக கொள்ளும் பொழுது நமது உடலின் இயற்கை சர்க்காரின் கடிகாரம் சீர்குலைக்கப்பட்டு, அதனால் ஹார்மோன் வெளியீடு, வளர்சிதை மாற்றம் மற்றும் உடல் வெப்பநிலை போன்ற அத்தியாவசிய செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது.
  • நீண்ட நாட்களுக்கு தாமதமாக தூங்கும் பொழுது கவனிப்பதில் சிக்கல், ஞாபகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் எச்சரிக்கையாக இருக்கும் திறன் போன்ற அறிவுத்திறன் சார்ந்த சிக்கல்கள் எழுகிறது.
  • தாமதமாக தூங்குவது கார்ட்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவை அதிகரித்து, அதனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் ஒரு சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பு கூட ஏற்படலாம்.
  • நாள்பட்ட தூக்கக் குறைபாடு உங்களது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவிழக்கச் செய்து, அதனால் அடிக்கடி உங்களுக்கு உடல் நல குறைவு மற்றும் தொற்றுகள் ஏற்படலாம்.
  • நள்ளிரவுக்கு பிறகு தூங்கும் பொழுது நமது உடலில் வளர்சிதை மாற்றம் சீர்குலைக்கப்பட்டு, அதனால் உடல் எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பிற வளர்சிதை மாற்ற கோளாறுகள் ஏற்படுவதற்கு பங்களிக்கிறது.

 

இந்த பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

  • தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு செல்வது மற்றும் ஒரே நேரத்தில் தூங்கி விழிப்பது போன்ற ஒரு குறிப்பிட்ட அட்டவணையை பின்பற்றுங்கள். இது உங்களுடைய உடலில் உட்புற கடிகாரத்தை ஒழுங்கமைக்க உதவும்.
  • தூங்குவதற்கு முன்பு புத்தகம் படிப்பது லேசான நீட்சி பயிற்சிகள் அல்லது தியானம் போன்றவற்றை செய்வது உங்கள் மனதை அமைதிப்படுத்தி நிம்மதியாக தூங்குவதற்கு வழிவகுக்கும்.
  • படிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
  • லேட் நைட் ஸ்நாக்ஸ் போன்றவற்றை முடிந்த அளவு தவிர்க்கவும். இரவு நேர உணவை லேசாகவும், எளிதில் ஜீரணமாக கூடியதாகவும் தேர்ந்தெடுக்கவும்.
  • நீங்கள் படுத்து உறங்குவதற்கு சௌகரியமான பாய் அல்லது மெத்தை, தலையணை, இருட்டான மற்றும் அமைதியான அறையை தேர்வு செய்யவும்.
  • இந்த விஷயங்களை பின்பற்றுவதன் மூலமாக தரமான தூக்கத்தை பெற்று உடலை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்ளலாம்.

Related Post

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ

Posted by - October 15, 2025 0
வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்…

நடிகை குஷ்பூவின் மகளா இது! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே

Posted by - June 28, 2023 0
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் குஷ்பூ. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக விஜய்யின்…

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்காக களம் இறங்கும் லலிதா-மனோன்மணி.. சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

Posted by - February 25, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம்…

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

Posted by - December 20, 2023 0
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு…

அன்பு ஆவேசமாக செய்த விஷயம்.. ஆனந்தி ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

Posted by - May 26, 2025 0
சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பம் ஒருபக்கம், அதை அவர் எல்லோரிடமும் மறைத்து வைத்திருப்பதால் வரும் பிரச்சனைகள் ஒருபக்கம் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனந்தி மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *