திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலைதிமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

183 0

ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, NCRB அறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இது தவிர, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 1,294. தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்திருக்கிறது.

இவை அனைத்தும் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை இத்தனை மோசமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கவும், திமுக ஆட்சி மீது விமர்சனம் வைப்பவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும் மட்டுமே, காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார் முதலமைச்சர்  ஸ்டாலின்.

காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை, திமுக நிர்வாகிகள் போலப் பயன்படுத்தி, அரசுத் துறைகள் அனைத்தையுமே செயலிழக்கச் செய்து விட்டார்கள்.

இதன் விளைவுதான், சீரழிந்து போன சட்டம் ஒழுங்கும், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்களும்.

ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Related Post

விஜய்யை மிக கடுமையாக விமர்சிப்பது ஏன்? மனம் திறந்த சீமான்

Posted by - September 12, 2025 0
சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய்யை எதிர்ப்பது ஏன்? என்று சீமான் மனம் திறந்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் சட்டமன்ற…

இன்று நெல்லை வரும் அமித்ஷா.. நயினார் வீட்டில் விருந்து..! விஜய்க்கு எதிராக வியூகம் வகுப்பாரா?

Posted by - August 22, 2025 0
திருநெல்வேலியில் இன்று நடக்கும் பாஜக பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக அமித்ஷா இன்று வருகிறார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதற்கான…

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - October 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…
fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

Posted by - May 8, 2026 0
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும்,…

டெல்லி செல்வது எதற்காக.? நாளை முக்கிய அறிவிப்பு உண்டா.? செங்கோட்டையன் பதில் இதுதான்

Posted by - September 8, 2025 0
டெல்லி பயணத்திற்கு முன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது பயணம் குறித்தும் நாளை முக்கிய அறிவிப்பு உள்ளதா என்பதற்கும் என்ன…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *