dmk

இன்று தான் கடைசி.!

134 0

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடையவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுகிறதா.? இல்லையா என்பது இன்று மாலைக்குள் முடிவு வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியானது இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டார தகவலாக இருந்து வருகிறது. எனவே கடைசி கட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இதன் படி, கூட்டணி மற்றும் தொகுதிபங்கீட்டை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, கடந்த 2021ஆம் ஆண்டு கூட்டணியில் உள்ள கட்சிகளோடு வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டது.

ஆனால் திடீரென காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவை விமர்சித்தும், தவெகவை உயர்த்தி பேசியும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மேலும் கருத்து கணிப்பு என ஒரு சில சர்வேக்களையும் பதிவிட்டு திமுகவை விமர்சிக்க தொடங்கினர்.

திமுகவிற்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்

இதனால் திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக தேமுதிகவை கூட்டணியில் இணைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக மறைமுகமாக செக் வைத்தது. இருந்த போதும்   காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும், 2 ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என பட்டியலை கொடுத்துள்ளது. ஆனால் திமுக தரப்போ திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளது. எனவே கடந்த 2021ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகுதிளான 25 மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளது.  மேலும் அதிகபட்சமாக 26 முதல் 28 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

இதனையடுத்து ராஜ்யசபா தேர்தலுக்கு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக உள்ளது. எனவே கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுகிறதா.? இல்லையா என்பதை நேற்று மாலைக்குள் அறிவிக்க வேண்டும் என திமுக கெடு விதித்தது. இதனையடுத்து திமுகவை சமாதானம் செய்யும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ள எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக தரப்போ கூடுதல் தொகுதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

திமுக கூட்டணியில் தொடருமா காங்கிரஸ்

எனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுகிறதா.? இல்லையா என்பதை இன்று மாலைக்குள் அறிவிக்க வேண்டும் என கெடு விதித்துள்ளது திமுக. எனவே திமுகவுடன் இன்று காலை காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா.? அல்லது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுமா என்பது இன்று தெரியவரும். எனவே இதனை தமிழக அரசியல் வட்டாரம் மட்டுமில்லாலம் நாடே எதிர்பார்த்து காத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இண்டியா கூட்டிணியில் முக்கிய கட்சியாக திமுக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்,

Related Post

Generated Image February 10 2026 4 06PM

விஜய்க்கு வலைவீசும் பாஜக

Posted by - March 9, 2026 0
தீய சக்திகளின் தவறான ஆலோசனைகளை ஏற்று, திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, பாஜக – அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அவர் தடைக்கல்லாக இருக்கக்கூடாது. தமிழக அரசியலில் விஜய்…
dmdk 2 e1776320866955

“பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

Posted by - April 16, 2026 0
மு.க.ஸ்டாலின் ஆட்சி மீது போதைக் கலாச்சாரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுதான் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியது திமுக-வினரை அதிருப்தி அடையவைத்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான…
Gemini Generated Image 4cdtsc4cdtsc4cdt

பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன?

Posted by - April 3, 2026 0
பாஜக வேட்பாளர் பட்டியலில் அதிர்ச்சி! அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு: அரசியல் நகர்வு என்ன? தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில்,…
tvk cm e1777981664118

Vijay Swearing-In: ”ஜோசப் விஜய் ஆகிய நான்” முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!

Posted by - May 5, 2026 0
Vijay Swearing-In Ceremony: தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் பதவியேற்பு எப்போது? எங்கே? தேதி குறித்த தவெக! தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (மே 7ஆம் தேதி) முதலமைச்சராகப்…
qwefghm

’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்

Posted by - March 17, 2026 0
உள் பாவாடை கிடையாதா? சிவி சண்முகத்தை அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்! பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து நடைபெற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *