தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி!

190 0

 திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. மொத்தமாக, ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்திருந்த நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. 20 சுற்றுகளாக இந்த வாக்குகள் எண்ணப்பட்டன. இந்நிலையில், முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வந்தார்.20வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

Related Post

காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குங்குமப்பூ விளைவித்து விவசாயி சாதனை

Posted by - November 25, 2023 0
கொடைக்கானல்: மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற…

என்னை எனக்கே புதிதாய் காட்டிய படம்.. ஓபனாக பேசிய நடிகர் ஜெயம் ரவி

Posted by - December 18, 2024 0
ஜெயம் ரவி ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி கலக்கிவரும் நடிகர் ரவி. முதல் படம் வெற்றி கொடுக்க ஜெயம் ரவி என்று தனது பெயரை…

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

Posted by - November 28, 2024 0
அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம்…

அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்

Posted by - January 26, 2024 0
சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட மாதிரி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த விஜய்யை சில அரசியல்…

சென்னையில் ஜனவரி மாதம் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 100 நாடுகள் பங்கேற்பு

Posted by - August 21, 2023 0
சென்னை: பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *