தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் இதுவா? தேர்தலில் மெர்சல் காட்ட விஜய் மாஸ்டர் ப்ளான்!

265 0

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தை அணுக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு உள்ளது. ஆனால், 2025 பிறந்தது முதலே அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்த நாடுமே உற்று நோக்கியுள்ளது. திமுக – அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளுக்கும் போட்டியாக இந்த முறை தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கியுள்ளது.

தவெக-வின் சின்னம் எது?

இதனால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை பூத் கமிட்டி முதல் தலைமை நிர்வாகிகள் வரை வலுப்படுத்தி வருகிறார். விஜய் என்ற மிகப்பெரிய அஸ்திவாரம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருந்தாலும், அக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்க சின்னம் மிகப்பெரிய அடையாளம் ஆகும்.

விஜய்க்கு நிகரான சக்தியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருக்கப்போவது அந்த சின்னமே. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆட்டோ சின்னத்தை குறிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆட்டோ, அகல் விளக்கு மற்றும் நட்சத்திரம் ஆகிய 3 சின்னங்களை அனுப்பி அதில் முதன்மை சின்னமாக ஆட்டோ சின்னத்தை தருமாறு தேர்தல் ஆணையத்தை அணுக தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆட்டோவை குறிவைத்தது ஏன்?

தமிழக வெற்றிக் கழகம் ஆட்டோ சின்னத்தை தேர்வு செய்வதற்கு முதன்மை காரணம் ஆட்டோ என்பது சாமானிய மக்களின் அடையாளங்களில் ஒன்றாகவே திகழ்கிறது. நடிகர் விஜய் வேட்டைக்காரன் படத்தில் ஆட்டோ ஓட்டுநராகவும் நடித்தார். ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்த பிறகு ஆட்டோ ஓட்டுனர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டில் பன்மடங்கு அதிகரித்தது.

வேட்டைக்காரன் படம் பெரியளவு வெற்றி பெறாவிட்டாலும் ரஜினியைப் போலவே ஆட்டோக்களில் இடம்பெறும் அளவிற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு அதிகரித்தது. இந்த காரணத்தாலும் சாமானிய மக்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆட்டோவை விஜய் குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

சின்னத்தை விளம்பரப்படுத்த உத்தரவு:

இந்த சின்னம் உறுதியானால் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய்யின் கடைசி படத்திலும் அந்த சின்னம் தொடர்பான காட்சிகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய், சின்னம் உறுதி செய்யப்பட்ட பிறகு தனது சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் உத்தரவிட உள்ளார். இதற்கான பணிகள் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்ட தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கணக்கில் விஜய்:

கட்சியின் சின்னமே ஒரு கட்சியின் செல்வாக்கை மட்டுமின்றி அதன் அங்கீகாரத்தையும் உறுதிசெய்யும். இதனால், சின்னம் விவகாரத்தில் மிகவும் கவனமாக தமிழக வெற்றிக்கழகம் செயல்பட்டு வருகிறது.

தனது கடைசி படமான ஜனநாயகன் முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. விரைவில் சுற்றுப்பயணத்தில் இறங்க உள்ள விஜய் தற்போது கூட்டணிக்கான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

 

Related Post

செடியிலேயே அழுகும் அவலம்; நாள்தோறும் எகிறும் தக்காளி விலை – கிலோ ரூ.130 வரை விற்பதால் மக்கள் அவதி!

Posted by - July 3, 2023 0
சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிலோ ஒன்றுக்கு 160 வரை விலை அதிகரித்துள்ளது.…

கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி! – எம்.எல்.ஏவாகி 19 மாதங்களில் அமைச்சர்!

Posted by - December 13, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களில் தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார்…

விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

Posted by - July 6, 2023 0
மொடக்குறிச்சி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்.. புதிய வீடியோவால் பரபரப்பு..!

Posted by - October 21, 2024 0
குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் பகிர்ந்திருந்தார். யூடியூபர் இர்பானுக்கு குழந்தை பிறந்த வீடியோவை வெளியிட்ட நிலையில்,…

தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் – ஈபிஎஸ் விளாசல்..!!

Posted by - September 3, 2024 0
தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *