நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

232 0

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார்.h raja 2 2025 08 6b6339038b23fdfbc6ca6b92a598a43f

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் எச் ராஜா. முன்னாள் எம்எல்ஏவான இவர் தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். தற்போது அரசியலில் இருந்து சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தை வீர முருகன் என்பவர் இயக்குகிறார். சிவ பிரபாகரன் – சந்திரசேகர் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் ஹெச்.ராஜா முறுக்கு மீசை வைத்துள்ளார். கழுத்தில் ருத்ராட்ச மாலை, கையில் ருத்ராட்ச மாலை அணிந்துள்ளார். பின்னணியில் கோயிலின் நுழைவு வாயிலில் இருக்கும் கதவு தெரிகிறது. அந்த கதவின் வழியாக எச் ராஜா கூட்டமாக கோவிலுக்கும் நுழையும் வகையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு போஸட்ரில் நாற்காலியில் கழுத்தில் ருத்ராட்ச மாலைகளை அணிந்து கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறார் ஹெச்.ராஜா. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் மலையை தான் கந்தன் மலை என அழைப்பார்கள். அதனடிப்படையில் இந்தப் படம் திருப்பரங்குன்றம் முருகன் மலையை அடிப்படையாக கொண்டு உருவாகிஇருப்பதாக கூறப்படுகிறது.h raja 2025 08 c4e79972c08964979b638d453ae25dad

ஹெச்.ராஜாவின் இந்த திடீர் நடிகர் அவதாரம் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. மதத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகிறதா? என்ன மாதிரியான கதைக்களத்தில் ஹெச்.ராஜா நடிக்கிறார் என்பது குறித்த பல்வேறு கருத்துகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Post

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா

Posted by - April 6, 2023 0
ஆலயத்திற்கு சென்ற நயன்தாரா நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அங்கு…

“லியோ” காலை 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? – தமிழக அரசு பதில்

Posted by - October 18, 2023 0
சென்னை: நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் நாளை வெளியாகிறது. லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட…

லியோ படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா?. இது தான் தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை

Posted by - July 25, 2023 0
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து…

இந்தியன் 2 படம் நஷ்டம் இல்லை லாபமா!

Posted by - July 18, 2024 0
இந்தியன் 2 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திரைப்படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தை பிரமாண்ட…

விஜய் படத்தை இயக்கி மறுத்த பிரதீப் ரங்கநாதன்.. காரணம் என்ன தெரியுமா?

Posted by - June 3, 2023 0
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். தற்போது இவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படம் குறித்து வரும் அப்டேட்களை நமது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *