mammutty

நடிகர் மம்மூட்டியின் உடல்நலன் பாதிப்பு.. முக்கிய விஷயங்களை இழந்துவிட்டார்!!

99 0

மம்மூட்டி

மலையாள திரையுலகில் டாப் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் மம்மூட்டி. இவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக 2025ஆம் ஆண்டில் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார்.இந்த நிலையில், மருத்துவமனை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மம்மூட்டி, உடல்நலக் குறைவான அந்த சமயத்தில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்முறையாக பொதுவெளியில் பேசியுள்ளார்.அவர் பேசுகையில், “கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. எனக்கு நீண்ட காலமாக வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் இருந்தது. எதனையும் என்னால் முகர முடியவில்லை. அதேபோல் உணவின் சுவையும் தெரியவில்லை. இப்போதுதான் அது மெதுவாக திரும்பி வருகிறது. ஒரு விஷயத்தை நாம் இழக்கும் போதுதான் அதனுடைய மதிப்பை உணர்கிறோம்” என கூறினார்.சுமார் ஓராண்டு காலம் சிகிச்சைக்கு பின் நடிகர் மம்மூட்டி இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள் வெளியானாலும், அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

லியோ படத்தின் One Line Story இதுதானா?- லீக்கானதா, அதிர்ச்சியில் படக்குழு

Posted by - July 27, 2023 0
விஜய்யின் லியோ தரமான படங்களாக இயக்கி இப்போது முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், மாஸ்டர், கைதி,…

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - December 10, 2025 0
படையப்பா கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன்,…

நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படம் எப்படி உள்ளது?

Posted by - March 31, 2023 0
விடுதலை வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்முநையாக நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விடுதலை. சூரி இதில் போலீஸ் வேடத்தில் பல அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். படத்திற்காக…

படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..!!

Posted by - March 15, 2024 0
பிக் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை நைசாக தூக்கிச்சென்ற பிக் பாஸ் புகழ் பூர்ணிமா தற்போது சினிமாவில் படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக…

AK-வை நேரில் சந்தித்த SK.. அடுத்த திட்டம் என்ன ரசிகர்கள் கேள்வி..

Posted by - November 23, 2022 0
நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *