ASDFGH

ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

74 0

சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே, தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தால், மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பும் மகளிருக்கு ஒரு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை அரசிடம் முன்வைத்தார். அப்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது, மகளிர் உரிமைத் தொகை தடுக்கப்பட்டதாக என்றும், நடைமுறையில் இருக்கும் திட்டத்தை யார் தடுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், நாங்களும் 2000 ரூபாய் தருவதாக அறிவித்துள்ள நிலையில், நாங்கள் எப்படி அதை தடுப்போம் என்றும் நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதோடு, தேர்தல் உஷ்ணத்தின் காரணமாகத் தான் கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் கொடுத்துள்ளீர்கள், கடந்த 4 ஆண்டுகளாக அதை கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் கீதா ஜீவன் பதில்

எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கேள்வியை கேட்பதால், அதன் அடிப்படையில் பதில் கூறுவதாக தெரிவித்து, இனி ஒவ்வொரு வருடமும் இந்த 2000 ரூபாய் கோடைகால சிறப்புத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அமைச்சர் ஒருவர் கூறினால், அது அரசின் அறிவிப்பு போன்றது தான்.

அதனால், இதன் அடிப்படையில், திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், இனி ஆண்டுதோறும் கோடை காலத்தில், மகளிருக்கு 2000 ரூபாய் சிறப்புத் தொகை வழங்கப்படும் என்பது உறுதியாகிறது.

இதேபோல், இது குறித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு, ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் வருவதால், வெயில் காரணமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அதனால் தான், மகளிருக்கு கூடுதலாக கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும், இந்த கோடைகால சிறப்புத் தொகை கொடுத்தது, எங்கள் ஆட்சியின் கொள்கை முடிவு என்றும் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

Related Post

Generated Image January 23 2026 11 33AM

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி

Posted by - January 23, 2026 0
“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?

Posted by - December 9, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்து அமித்ஷா திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். நெருங்கும் தமிழக தேர்தல் சட்டமன்ற…
dmdk 2 e1776320866955

“பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

Posted by - April 16, 2026 0
மு.க.ஸ்டாலின் ஆட்சி மீது போதைக் கலாச்சாரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுதான் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியது திமுக-வினரை அதிருப்தி அடையவைத்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான…

திருச்சியில் விஜயின் எண்ட்ரி – தமிழக அரசியல் ஆட்டம் காணுமா? திராவிட கட்சிகளின் செண்டிமெண்ட்…

Posted by - September 13, 2025 0
 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு பயணம், திருச்சியில் இன்று தொடங்குகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம்…
Untitled 1

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

Posted by - March 24, 2026 0
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *