நம்ம சென்னைதான் கெத்து! ஹைபர்லூப் டெக்னிக்கில் எலான் மஸ்க்கையே அதிர வைத்த ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள்

352 0

சென்னை:

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வடிவமைத்த ஹைபர்லூப் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில்தான் செல்லுமாம், ஆனால் சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாகிய ஹைபர்லூப் வாகனத்தில் மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பயணிக்கலாம்.

ஒரு வெற்றிடம் கொண்ட பைப் வழியாக ரயிலை இயக்கினால் 350 கி.மீ. தூரத்தை அரை மணி நேரத்தில் கடக்கும் ஹைபர்லூப் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.நம்ம சென்னைதான் கெத்து! ஹைபர்லூப் டெக்னிக்கில் எலான் மஸ்க்கையே அதிர வைத்த  ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் | Elon musk hyperloop travels 1000 kmph whereas iit  madras's 1200 ...

இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தினால் சென்னையிலிருந்து பெங்களூருக்கு வெறும் 30 நிமிடங்களில் செல்லலாம். ஐஐடி மெட்ராஸின் மாணவர்கள் குழு படைத்துள்ள அவிஷ்கர் ஹைப்பர்லூப் என்ற இந்த ஆராய்ச்சித் திட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நடத்திய ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் சார்பில் இந்தியா சார்பில் ஐஐடி மெட்ராஸ் குழு இறுதி போட்டி வரை முன்னேறியது. இதில் அவர்கள் விருதையும் வாங்கியுள்ளனர். இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் என்பது மின்னல் வேக டெக்னிக் ஆகும். காற்றில்லாத ஒரு குழாயை உருவாக்கி அதில் மின்காந்த அலைகளின் உதவியுடன் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. காற்று புகாத வெற்றிடத்தில் பயணிக்கும் போது மின்னல் வேகத்தில் பயணிக்கலாம்.

அதிக ஒலியோ காற்று மாசையோ ஏற்படுத்தாது. விமான நிலையங்கள் போல் இதற்கென பிரத்யேக உள்கட்டமைப்புகள தேவையில்லை. விமானத்தின் வேகத்தில் செல்லும். வெற்றிக்குழாயில் ஹைப்பர்லூப்பில் மணிக்கு 1200 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யலாம். இந்த தொழில்நுட்பத்தில் முதல் ரயிலை உருவாக்க 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் சில மாதங்களிலேயே சோதனையை இந்த மாணவர்கள் வெற்றிகரமாக செய்துவிட்டனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க்தான் இந்த தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தினார். அவரது நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட ஹைபர்லூப் மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் செல்லும்.

ஆனால் ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் ஹைபர்லூப் டெக்னிக்கால் 1200 கி.மீ. வேகத்தில் செல்லலாம். இதனால் எலான் மஸ்க்கையே இந்த மாணவர்கள் ஆச்சரியப்பட வைத்துவிட்டார்கள் என சொல்லலாம். இந்த தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ8.34 கோடி நிதியை ஐஐடி மெட்ராஸுக்கு ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது.

Related Post

சேனைக்கிழங்கு.. நீங்க கருணைக்கிழங்கு சாப்பிடறீங்களா? அப்ப இதை மறக்காதீங்க.. பெண்ணின் அருமருந்து சேனை

Posted by - November 28, 2023 0
சென்னை: பெண்களின் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு உதவக்கூடிய உணவுகள் என்னென்ன தெரியுமா? ஈஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் உடலில் காணப்படும் ஒரு…

இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

Posted by - April 26, 2025 0
இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம்…

என்.எல்.சி. அனல்மின் நிலையத்தால் கடலூர் கிராமங்களில் சுகாதார சீர்கேடு- ஆய்வுஅறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Posted by - August 9, 2023 0
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.…

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே வெள்ளத்திற்கு காரணம்: சீமான் காட்டம்…

Posted by - December 6, 2023 0
சென்னை: திமுக அரசின் தோல்வியே சென்னை வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து சீமான் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றத்தை…

‘டீ’ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி ; விஷமாக மாறிய காதல்… கம்பி என்ன வைத்த போலீஸ்

Posted by - March 4, 2025 0
காதலை கைவிட நினைத்த காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற காதலி. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் சட்டக்கல்லூரி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *