நிம்மதியே இல்ல… ‘அடுத்தவர்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’… ஜி.பி.முத்து வீடியோ வைரல்

258 0

உடன்குடி:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார்.

நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால் அதிகம் கவனிக்கப்பட்ட இவர் தொடர்ந்து ஓ மை கோஸ்ட், பாபா பிளாக்ஷீப் உள்ளிட்ட சில படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சின்னத்திரை, பெரிய திரையில் நடித்து வரும் ஜி.பி. முத்து நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-Famous Tiktoker GP Muthu Crying for his friend dead!| ஆண்டவனே இல்ல : கதறி  அழுத ஜிபி முத்து! Tamil Nadu News in Tamil

நண்பர்களே, நான் அப்படியே குலசை கடற்கரைக்கு வந்தேன். ஏன்னு கேட்டீங்கன்னா, நிம்மதியே இல்ல. ரொம்ப மனசங்கடமா இருக்கு. அடுத்தவங்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது. நமக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்யணும். அடுத்தவங்க இருக்காங்க, அவங்க வைக்குறாங்கன்னு யார் சொல்றதையும் கேட்க கூடாது. சில விஷயங்கள் செய்வதால் நல்லவர்களுடைய மன கஷ்டத்துக்கு ஆளாகி விடுகிறோம்.

இன்னைக்கு ஒரு சின்ன விஷயம் நடந்துச்சு. அது என் மனதை மிகவும் பாதித்து விட்டது. அதை நானே பேசி முடித்து விட்டேன். யாருமே உங்களுக்கு என்ன தோணுதோ அதை மட்டுமே செய்யுங்க. அடுத்தவங்க இருக்காங்கன்னு நினைக்காதீங்க. இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

என்ன காரணம் என அவர் தெரிவிக்காத நிலையில் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஜி.பி.முத்துவுக்கு உண்மையில் என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனால் நீங்கள் மனவருத்தப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Post

முருங்கை மரம்.. வேர் முதல் காய் வரை கொட்டிக்கிடக்கும் அதிசயம்.. ஆச்சரிய குச்சிகளும், அதிசய பூக்களும்

Posted by - December 21, 2023 0
சென்னை: முருங்கை என்றாலே பெண்களுக்கு அருமருந்தாகக்கூடிய கீரையாகும்.. முருங்கை ஈர்க்குகள் பெண்களுக்கு எப்படி உதவுகிறது தெரியுமா? முருங்கை விதைகளை வைத்து என்ன செய்யலாம்? பெண்களுக்கு 45 வயதாகிவிட்டாலே…

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Posted by - October 15, 2024 0
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
ADMK DMK

ADMK DMK: ”விஜய் ஆட்சி நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்” அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?

Posted by - May 16, 2026 0
ADMK DMK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி தனிப்பெரும்பான்மை பெறுவதை தடுக்க, அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாம். ADMK DMK: முதலமைச்சர் விஜய் தலைமையிலான…

நோயெதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்கா? மழை வந்தாலே சளி பிடிக்குதா? அப்ப இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க..

Posted by - November 30, 2023 0
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. என்ன தான் சூரியன் கண்ணில் தென்பட்டாலும், திடீரென்று காலநிலை மாறி கன மழையும் பெய்து வருகிறது.…

Christmas 2025: இந்தியா முழுவதும் கொண்டாட்ட வேகம்… சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் ஸ்பெஷல் Events!

Posted by - December 12, 2025 0
சென்னை: உலகம் முழுவதும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் Christmas 2025 கொண்டாட்டங்கள் பெரிய கொண்டாட்டத்தோடு இன்று ஆரம்பமானது. தமிழ் நாடு முழுவதும் தேவாலயங்கள், மால்கள், கடைகள், சுற்றுலா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *