ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

150 0

பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறவில்லை என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக வெளிநடப்பு:

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடி ஆகியோர் மீது, அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கப்பட்டது. இன்று சட்டப்பேரவை அலுவல் தொடங்கியதுமே, தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வலியுறுத்தினர். ஆனால், தீர்மானம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது பரிசீலனையில் உள்ளது. இன்றைக்கு மற்ற அலுவல்கள் இருப்பதால், அதை விவாதத்திற்கு எடுக்க முடியாது” என அப்பாவு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

”அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லை”

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடி ஆகியோர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்து மதம் மற்றும் பெண்கள் தொடர்பாக அமைச்சர் பொன்முடி அநாகரீகமாக பேசியுள்ளார்” என கண்டித்தார்.

பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா?

தொடர்ந்து பாஜக உடனான கூட்டணியில் அதிகாரத்திலும் பங்களிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, “ கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம்; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை; நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும்  கூறவில்லை; டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா கூறினார். பாஜக – அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றே அமித் ஷா குறிப்பிட்டார். பாஜக உடனான கூட்டணி என்பது திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்கானது மட்டுமே. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சி கிடையாது. தேர்தலுக்கு ஒன்னும் ஓராண்டு உள்ளதால் அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும்” எனவும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

Related Post

நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி

Posted by - August 27, 2024 0
யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தெடார்ந்து சினிமாவில்…

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

கரு உருவாக்கும் கருவளர்ச்சேரி ..

Posted by - September 21, 2023 0
ஒரு பெண் கருவை சுமப்பதற்கு ஆதாரமாக திகழும் மூலத்தலமாக கரு வளர்ச்சேரி திகழ்கிறது கருவளர்ச்சேரிக்கு வரும்போது திருமணம் ஆன பெண்கள் தனியாக வருவதை தவிர்த்து கணவனுடன் வர…

பட்டுபோன்ற மென்மையான நீளமான கூந்தலை பெறணுமா? அப்ப ‘இந்த’ 7 உணவுகளை மறக்காம சாப்பிடுங்க!

Posted by - December 26, 2023 0
ஆண், பெண் என அனைவரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்கள். நவீன வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், தலைமுடி பாதிப்படைகிறது.…

போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் 700 பேர் கைது – சென்னை அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் முற்றுகை

Posted by - December 31, 2025 0
சென்னை: பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகிய முக்கிய இடங்களை முற்றுகையிட முயன்ற 700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *