எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை.. அதிமுக பொதுச் செயலாளர்கள் லிஸ்ட்..!

478 0

அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இதுவரை பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தது யார் யார் என்று தற்போது பார்க்கலாம்.

1972-ம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக 1978-ம் ஆண்டு வரை நீடித்தார். அவரையடுத்து, நெடுஞ்செழியன் 1980 வரை இப்பொறுப்பில் இருந்தார். எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியனை அடுத்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த ப.உ.சண்முகம், 4 ஆண்டுகள் 275 நாட்களும், ராகவானந்தம் ஓராண்டு 216 நாட்களும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்தனர்.

இவர்களை அடுத்து மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்ஜிஆர், இறுதிக் காலம் வரை பொதுச் செயலாளராக இருந்தார். எம்ஜிஆர் இறப்புக்குப் பின்னர் 1989-ம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா, அன்று முதல் அவர் இறக்கும் வரை 27 ஆண்டுகள் 300 நாட்களுக்கு அந்த பதவியில் தொடர்ந்தார்.

 

இவரை தொடர்ந்து, வி.கே.சசிகலா 2016 டிசம்பர் முதல் வெறும் 48 நாட்கள் மட்டுமே தற்காலிக பொதுச் செயலாளராக அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். தற்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் எட்டாவது பொதுச்செயலாளராகவும், அந்தப் பதவியை அலங்கரிக்கும் ஏழாவது தலைவராகவும் உருவெடுத்துள்ளார். தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையுடைய அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பல நாட்கள் கழித்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Related Post

மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை: சம்மன் அனுப்பி அழைக்க இருப்பதாக போலீசார் தகவல்

Posted by - November 22, 2023 0
சென்னை: நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில்…

`திருட்டுப்போன பைக்கை ஓட்டி வந்த போலீஸ்’ – தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யிடம் புகார் அளித்த விவசாயி

Posted by - December 2, 2022 0
“திருட்டுப்போன பைக்கை வாய்மேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ் ஒருவர் பயன்படுத்திவருவது தெரியவந்தது. போலீஸ் என்பதால் பயந்துபோன நான், பைக் குறித்து எதுவும் கேட்கவில்லை.” ஒரு வருடத்துக்கு…

சொரியாசிஸ் போல ஏதேனும் தோல் பிரச்சனை இருக்கா? அப்ப வாழைப்பழத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!

Posted by - December 30, 2023 0
சொரியாசிஸ் என்பது ஒரு தோல் நிலை. இது சருமத்தில் செதில் புள்ளிகளை ஏற்படுத்துகிறது. தடிப்புத் தோல் அழற்சிக்கான வாழைப்பழத் தோல்கள் வேலை செய்யக்கூடிய ஒரு நல்ல வீட்டு…

மீண்டும் மதன் ரவிச்சந்திரன்; ‘ஸ்டிங் மேளா’ வீடியோக்களால் பரபரப்பு!

Posted by - March 16, 2023 0
ஓராண்டுக்கும் மேலான இடைவெளியில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். இம்முறை ’ஸ்டிங் மேளா’ என்ற பெயரில் அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் பலரின் வயிற்றில் புளி…

களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!

Posted by - January 20, 2025 0
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை விஜய் நேரில் சந்தித்துள்ள நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *