பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! – மோடி கேரண்டி என்ற பெயரில் தேர்தல் அறிக்கை!

307 0

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதிக்கும்வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியும் தங்களின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், பாஜக  மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்,  உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது.

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ள முக்கிய வாக்குறுதிகள்:

1. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை’ அமல்படுத்தப்படும்,
2. 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு ரூ. 5 லட்சம் மருத்துவக் காப்பீடு,
3. பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,
4. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்,
5. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும்,
6. சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும்,
7. பொது வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும்,
8. 2025-ஆம் ஆண்டு ‘பழங்குடியினரின் பெருமை ஆண்டாகக்’ கடைபிடிக்கப்படும்,
9. பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும்,
10. வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,
11. அடுத்த 5 ஆண்டுகளில் கிராமங்களில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்துள்ளன.

Related Post

ஆந்திராவில் முதியவர் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள்- டாக்டர்கள் அதிர்ச்சி

Posted by - March 11, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை…
Generated Image November 15 2025 10 38AM

Bihar Election Result: பீகாரை வாரிச்சுருட்டிய NDA கூட்டணி.. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்? சர்ப்ரைஸ் தந்த ஓவைசி

Posted by - November 15, 2025 0
Bihar Election 2025 Result: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சி எத்தனை இடங்களை கைப்பற்றியுள்ளன என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம். Bihar Election…

கடன்பட்டது 100 ரூபாய்… 30 ஆண்டுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாயாக திருப்பி கொடுத்த ஆசிரியர்

Posted by - June 8, 2023 0
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர்…
Generated Image February 06 2026 10 50AM

Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..!

Posted by - February 6, 2026 0
 Hyundai i20 2026 Price Change: இந்திய சந்தையில் மாருதியின் பலேனோ,டாடாவின் ஆல்டோஸ் உடன் மோதும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஐ20 காரின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது. 25 ஆண்டுகளில்…

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - February 23, 2023 0
டெல்லி: ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *