பெண் டாக்டரின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

327 0

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் மனநல மருத்துவர் ஒருவரின் பேஸ்புக் பக்கத்தை யாரோ மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். பின்பு அந்த டாக்டரின் ஆபாசமான படங்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர். இதுகுறித்து அந்த பெண் மருத்துவர், போலீசாரிடம் புகார் செய்தார்.

அதன்பேரில் கேரள சைபர் கிரைம் போலீசார், பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை அழிக்க முயன்றனர். ஆனால் அவரது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்திருந்தால், அந்த படங்களை சைபர் கிரைம் போலீசாரால் நீக்க முடியவில்லை. ஆகவே பெண்டாக்டரின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்திருந்த நபரை கண்டு பிடித்து, படங்களை அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேஸ்புக் நடத்தும் நிறுவனத்துக்கு கேரள போலீசார் நோட்டீசு அனுப்பினர்.

அவ்வாறு நோட்டீசு அனுப்பும் பட்சத்தில், 36 மணி நேரதிற்குள் படங்களை நீக்க வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. ஆனால் ஒரு வாரமாகியும் பெண் டாக்டரின் பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்டிருந்த படங்களை நீக்கவில்லை. மேலும் போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு சரியான பதிலையும் பேஸ்புக் நிறுவனம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேஸ்புக் மீது கேரள போலீசார், குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Post

லிவ்-இன் பார்ட்னர் கற்பழிப்பு புகார்: மேக்-அப் கலைஞரை கொலை செய்து மனைவி உதவியுடன் உடலை ஓடையில் வீசிய நபர்

Posted by - September 13, 2023 0
திருமணமான நபருடன் வாழ்ந்து வந்த மேக்அப் கலைஞர், லிவ்-இன் வாழ்க்கை கசந்ததால் கற்பழிப்பு புகார் அளித்து, அதை திரும்பப்பெற மறுத்ததால் கொலை செய்யப்பட்டு, உடல் ஓடையில் வீசப்பட்ட…

காதல் திருமணங்களுக்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயமாக்கப்படும்

Posted by - December 18, 2025 0
திருமணமும்.. அதிகரிக்கும் பிரச்னையும் திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கிய அங்கமாக உள்ளது. காதல், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என இருவகைகளில் திருமணமானது நடைபெறுகிறது. அதேசமயம் சாதி,…

அசாமில் மார்க்கெட்டில் தீவிபத்து- 150 கடைகள் சேதம்

Posted by - February 17, 2023 0
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால்…

‘அனிமல்’ திரைப்படமும் ‘டாக்சிக்’ கருத்துகளும் – இணையத்தில் சூடுபிடித்த ‘ஆல்ஃபா ஆண்’ விவாதம்

Posted by - January 31, 2024 0
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, அடுத்து இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீக் கபூர் நாயகனாக நடித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி…

நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

Posted by - July 6, 2023 0
புதுடெல்லி: வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *