பாபா படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

239 0

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பாபா’.ரீ-ரிலீஸ் தேதி

இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. பாபா மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்த படத்தில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டப்பிங் பணியில் ரஜினிஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். டப்பிங் பணியில் ரஜினி இதைத்தொடர்ந்து, ‘பாபா’ திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக ‘பாபா’ படத்தின் புதிய காட்சிகளின் டப்பிங் பணியில் நடிகர் ரஜினிகாந்த் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். விரைவில் ‘பாபா’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் பாபா படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது. ரீ-ரிலீஸ் தேதி இந்நிலையில் ‘பாபா’ படத்தின் ரீ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Related Post

சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை

Posted by - March 27, 2023 0
சிங்கம் 2 ஹரி – சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் சிங்கம் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 திரைப்படம் உருவானது. அதே கதையின் தொடர்ச்சியில் உருவான…

இதுவரை இல்லாத புதிய லுக்கில் தனுஷ்.. D50 படத்தின் கெட்டப் இது தானா?

Posted by - July 3, 2023 0
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கேப்டன்…

ரெட்ரோ திரை விமர்சனம்…சூர்யாக்கு கம்பேக் கொடுத்ததா, பார்ப்போம்.

Posted by - May 2, 2025 0
சூர்யா பல வருடங்களாக ஒரு தியேட்டர் ஹிட்-க்கு போராடி வருகிறார், இந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்ற நம்பிக்கை இயக்குனருடன் கைக்கோர்க்க, ரெட்ரோ அந்த நம்பிக்கையை காப்பாற்றி…

விஷாலை கண்டு தெறித்து ஓடும் தயாரிப்பு நிறுவனங்கள்.. நாலா பக்கமும் துப்பறிவாளனுக்கு மூடப்படும் கேட்

Posted by - December 18, 2024 0
விஷால் என்று சொன்னாலே தயாரிப்பாளர்கள் ஒரு அடி பின் வாங்குகிறார்கள். திடீரென இவருக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறோம் என யாராவது பிரச்சனைக்கு வந்து விடுகிறார்கள். அது மட்டும்…

என்னென்ன பண்ணிருக்காங்க பாருங்க – ‘அரண்மனை-4’ படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி..!!

Posted by - April 27, 2024 0
‘அரண்மனை-4’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *