பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் தாறுமாறு அப்டேட் இதோ..!!

348 0

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .

உணர்ச்சி கரைப்படங்களுக்கு பெயர் போன இயக்குனர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் இயக்குனர் பாலா . இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும் இவரது படங்கள் காலம் கடந்து பேசும் அளவிற்கு மக்கள் மனதில் பதிந்து பொய் உள்ளது .

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் வணங்கான். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் சூர்யா சில பல காரணங்களால் பாதிலேயே வெளியேறினார் .

image 194

இதையடுத்து. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமானார் . அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படம் குறித்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு சிறப்பான தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது .

image 195

அதன்படி பாலாவின் இயக்கத்தில்உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் வணங்கான் படம் பாலாவின் ஹிட் லிஸ்டில் இணையுமா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

 

Related Post

சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

Posted by - ஜூலை 18, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…

கில்லி vs படையப்பா.. அதிக வசூல் செய்த படம் எது?

Posted by - டிசம்பர் 15, 2025 0
ரீ ரிலீஸ் படங்களுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன தளபதி விஜய்யின் கில்லி திரைப்படம் மாபெரும்…

விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!

Posted by - ஜூன் 1, 2023 0
விஜய் டிவி தீனா – பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்!வைரலாகும் போட்டோஷூட்!   போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனாவின்..வெட்டிங் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி…

ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.. கங்குவா அதிரடி அப்டேட்

Posted by - ஜூலை 20, 2023 0
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை…

சூர்யா கொடுத்த வாய்ப்பில் வசூல் மன்னனாக மாறிய விஜய்.. பிரபல தயாரிப்பாளர் பேச்சு

Posted by - பிப்ரவரி 29, 2024 0
தளபதி விஜய் விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன