பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மனம் இன்றி எலிமினேட் ஆன ஆர்.ஜே.ஆனந்தி – சாச்சனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

309 0

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வெளியேறிய ஆர்.ஜே.ஆனந்தி மற்றும் சாச்சனா இருவருமே பெரிய தொகையுடன் தான் வெளியேறி உள்ளனர் என கூறப்படுகிறது.

தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில், ஹீரோவாகவும் – வில்லனாகவும் பிரபலமான விஜய் சேதுபதியை ஒரு தொகுப்பாளராகவும் மாற்றி உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே கமலஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை யார்? தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஜய் சேதுபதிக்கு ரூ.15 கோடி ரூபாய், சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட நிலையில் இந்த முறை சற்று வித்தியாசமாக முதல் நாளே சாச்சனாவை வெளியே அனுப்பிய பிக்பாஸ் பின்னர் வைல்ட் காட் மூலம் மீண்டும் உள்ளே அழைத்து வந்தார்.

இதை தொடர்ந்து, மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வாரம் ஒரு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வந்த நிலையில், பிக்பாஸ் 50 ஆவது நாளை நெருங்கிய போது, அதிரடியாக ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களையும் உள்ளே அனுப்பி போட்டியாளர்களை மோத விட்டு விறுவிறுப்பை கூட்டினார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் 17 போட்டியாளர்கள் இருந்த நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என தெரிவித்த விஜய் சேதுபதி, சாச்சினா மற்றும் ஆர் ஜே ஆனந்தியை அடுத்தடுத்து வெளியேற்றினார். தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள் இருவரும் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சாச்சனா ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பளமாக வாங்கி வந்த நிலையில் 12 லட்சத்திற்கு மேல் சம்பளமாக பெற்றுள்ளதாகவும், ஆர்.ஜே.ஆனந்தி ஒரு நாளைக்கு ரூ.25,000 வீதம் சம்பளமாக பெற்று வந்த நிலையில், 15 லட்சத்துடன் வெளியேறியதாக கூறப்படுகிறது.

Related Post

வடக்குப்பட்டி ராமசாமி திரை பார்வை..

Posted by - February 3, 2024 0
தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில்…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 2, 2023 வியாழக்கிழமை.❤️

Posted by - March 2, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 2, 2023 வியாழக்கிழமை.❤️ மேஷம்✅ உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு…

பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க

Posted by - August 14, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது நடந்த வருகிறது. மேலும் இந்த சீஸனில் இரண்டு பிக்…

படுத்தபடி நடிகை சமந்தா கொடுத்த கிளாமர் போஸ்.. காட்டு தீ போல் பரவும் புகைப்படம்

Posted by - May 31, 2023 0
சமந்தா இந்தியளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது. வரலாற்று கதையில் சமந்தா நடித்திருந்தால், இப்படத்தின் மீது…

சொதப்பிக்கொண்டு வரும் பிக் பாஸ்.. தேசிய கொடியை மறைத்ததற்கான காரணம் இதுதான்?

Posted by - October 26, 2024 0
#bbtamil8 #biggbosstamil #biggbosstamil8 #sivakarthikeyan #vijaysethupathi #bb8 #vijaytv #tamilnews #indianflag   பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்களிலேயே ஏகப்பட்ட குளறுபடிகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *