பிரபல அரசியல் கட்சி நிர்வாகிகள், YouTuber-களின் அதிர்ச்சி வீடியோக்களை அடுத்தடுத்து லீக் செய்த மதன் ரவிச்சந்திரன்.. தமிழகமே பரபரப்பு..!

299 0

பொறுப்புத்துறப்பு: இந்த செய்தி Mars Tamilnadu Youtube பக்கத்தில் வெளியான முதல் 4 விடியோக்களில் கூறியதை சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

 

எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்ற வார்த்தைகளை கேட்டு பழகிப்போன நமக்கு, தற்போதைய பிரச்சனை பெரிதாக தெரியப்போவதில்லை என்றாலும், ஒவ்வொருவரும் தனியே அரசியல் பகுத்தறிவு பெறவேண்டியதன் கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டோம் என்பதே நிதர்சனம்.

தமிழ் செய்தி நிறுவனங்களில் பணியாற்றி, பின்னாட்களில் தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்தவர் மதன் ரவிச்சந்திரன். இவர் அன்றைய பாஜக முக்கிய புள்ளியாக இருந்த கே.டி ராகவனின் அந்தரங்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். கே.டி ராகவன் தனக்கு அறிமுகமான பெண்ணிடம் ஆபாசமாக பேசுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது.

அதனைத்தொடர்ந்து, பல பிரச்சனைகளை எதிர்கொண்ட மதன் ரவிச்சந்திரன், பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்து விடியோவை வெளியிட்டார். பாஜகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கு இருக்கிறார்? அவருக்கு என்ன ஆனது என பல கேள்விகள் இருந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று Mars Tamilnadu என்ற You Tube சேனல் மூலமாக மாறுபட்ட தோற்றத்துடன் வெளிஉலகிற்கு தென்பட்ட மதன் ரவிச்சந்திரன், வீணா என்ற பெண்ணுடன் சேர்த்து தொடங்கிய Youtube சேனல் மூலமாக பல பாஜக முக்கிய புள்ளிகளின் முகத்திரையை கிழிக்க இருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர்கள் இருவரும் கூறுகையில், “மாவட்ட வாரியாக பெண்களை தவறாக அணுகிய பல பாஜக முக்கிய புள்ளிகள் முதல், பணம் வாங்கிக்கொண்டு தங்களை நடுநிலையாளர்கள் போல மக்களிடம் காண்பித்து, ஒரேநேரத்தில் பல அரசியல் கட்சிக்காக செயல்பட்ட Youtuber-கள் வரை என ஒவ்வொருவரின் தனிப்பட்ட விடியோவும் விரைவில் வெளியியிடப்படும். இவை ஒவ்வொன்றாக வெளிவரும்.

பாஜக தலைவர் அண்ணாமலை தொடக்கத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளை எதிர்த்து குரல் கொடுத்து எங்களிடமே பேசியிருக்கிறார். ஆனால், அவர் தலைமை பொறுப்பு ஏற்றதும் அவரின் மாற்றங்கள் அபரீதமானது.

YouTubeல் உங்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை போல நடிப்பவர்கள் யாவரும் உண்மையானவர்கள் இல்லை. அவர்களை நம்பாதீர்கள்” என தெரிவித்துள்ளார். இது அரசியல் கட்சி தலைவர்களிடையே மட்டுமல்லாது, பல Youtube சேனல்களின் தலைமை பொறுப்பாளர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்புத்துறப்பு: இந்த செய்தி Mars Tamilnadu Youtube பக்கத்தில் வெளியான முதல் 4 விடியோக்களில் கூறியதை சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Related Post

ஆம்ஸ்ட்ராங் படுகொலை – தவெக தலைவர் விஜய் கண்டனம்

Posted by - July 6, 2024 0
சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் – விஜய் ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என தவெக தலைவர்…

தவெக மாநாடு : விக்கிரவாண்டியில் குவியும் தொண்டர்கள்… இத்தனை சிறப்பு ஏற்பாடுகளா?

Posted by - October 27, 2024 0
தவெக மாநாட்டிற்கு வருபவர்களின் மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக்…

ரேஷன் அரிசி இல்லாதபோது ஃபேஷன் ஷோ எதுக்கு? செவ்வாய்க்கு செங்கல்வராயன் ஏன்? பார்த்திபன் ஆதங்கம்

Posted by - December 7, 2023 0
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நடிகர் பார்த்திபன் ஆதங்கத்துடன் எக்ஸ் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது: நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப…

மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Posted by - July 10, 2023 0
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு…

மெஹந்தி அலங்கார தொழில்…சிறிய முதலீடு…அதிகப்படியான இலாபம்…!

Posted by - December 20, 2024 0
தற்போதெல்லாம் குடும்ப விழா சகிதங்களில் ’மெஹந்தி அலங்கார விழா’ என்றே தனியாக ஒரு விழா எடுக்கப்படுகிறது, அது போக மணப்பெண்களும் அன்றைய காலக்கட்டத்தில் மருதாணி வைக்க ஆசைப்பட்டவர்கள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *