மீண்டும் மதன் ரவிச்சந்திரன்; ‘ஸ்டிங் மேளா’ வீடியோக்களால் பரபரப்பு!

250 0

ஓராண்டுக்கும் மேலான இடைவெளியில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். இம்முறை ’ஸ்டிங் மேளா’ என்ற பெயரில் அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் பலரின் வயிற்றில் புளி கரைக்கும் வீடியோக்களை பந்தி வைத்திருக்கிறார்.மதன் ரவிச்சந்திரன் - வெண்பா கீதாயன் வெளியிட்ட வீடியோ ஒன்றின் முகப்பு

ஊடகவியலாளராக தமிழகத்தில் அறிமுகமானவர் மதன் ரவிச்சந்திரன். மரபான ஊடகங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அதிரடி பாணி அவருடையது. எடக்குமடக்கு கேள்விகளால் எதிர் தரப்பினரை நிலைகுலையச் செய்வதில் வித்தகர். அவரின் போக்கே அவருக்கு எதிரிகளை சம்பாதித்து தர, அவற்றை எதிர்கொள்ள தனக்கான பின்புலத்தை வலுவாக்கவும் முயன்றார்.

பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி விலகியவர், அண்ணாமலை ஆசியோடு பாஜகவில் இணைந்தார். அப்போதுதான், ஸ்டிங் ஆபரேஷன், ஹனி ட்ராபிங் என ஆடியோ, வீடியோ பதிவுகள் வெளியாக ஆரம்பித்தன. முக்கியமாக கே.டி.ராகவன் சிக்கிய சம்பவத்தில் மதன் ரவிச்சந்திரன் முக்கிய கண்ணியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து அண்ணாமலையுடனான கருத்து வேறுபாட்டில் அங்கிருந்து விலகியவர் ஓராண்டுக்கும் மேலாக அமைதி காத்தார். தற்போது ’மார்ஸ் தமிழ்நாடு’ என்ற யூடியூப் சானலுடன் மீண்டு வந்திருக்கிறார். எழுத்தாளர் வெண்பா கீதாயன் உடன் சேர்ந்து மதன் ரவிச்சந்திரன் அளவளாவும் இந்த வீடியோக்களில், பல அரசியல் மற்றும் ஊடக புள்ளிகள் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும், இந்த செய்தி வலையேறும் வரை 4 வீடியோக்களை வெளியிட்டிருக்கும் மதன் ரவிச்சந்திரன் – வெண்பா கீதாயன் தரப்பு, தங்களது ஸ்டிங் மேளா குறித்து அந்த வீடியோக்களில் விரிவாக விவாதிக்கிறது. மதன் ரவிச்சந்திரனும் தன்னிலை விளக்கமாக, பாஜகவில் சேர்ந்தது, அண்ணாமலையுடனான அனுபவங்கள், கே.டி.ராகவன் உள்ளிட்ட விவகாரங்கள்.. அவற்றின் பின்னணி எனப் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அவர்கள் பேசுவதை பார்க்கும்போது, இந்த வீடியோக்கள் அனைத்தும் ட்ரெய்லராகவே தென்படுகின்றன.

4 வீடியோக்களில் 2 வீடியோக்கள் தலா ஒரு மணி நேரத்துக்கும், அடுத்த 2 வீடியோக்களும் தலா சுமார் அரை மணி நேரத்துக்கும் நீள்கின்றன. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கே.டி.ராகவன், ராகவன் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட மலர்கொடி கமிஷன், அண்ணாமலைக்கு அனைத்துமான அமர் பிரசாத் ரெட்டி, பாஜகவில் இல்லாதபோதும் அண்ணாமலையின் ஆசிகளோடு வலம் வரும் திருச்சி சூர்யா சிவா, இவர்களுடன் தனியார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் தளங்களின் வாயிலாக வெகுமக்களுக்கு அறிமுகமான சிலர் என ஏராளமானோர் தலைகள் உருள்கின்றன. இன்னும் எத்தனை வீடியோக்கள் வெளியாகப் போகின்றன, அவை எவரையெல்லாம் குறிவைத்திருக்கின்றன, அவற்றின் உண்மைத் தன்மை என்ன, குற்றச்சாட்டுக்கு ஆளானோரின் தரப்பு விளக்கம் என்ன என்பதெல்லாம் இனிமேல்தான் வெளிப்பட உள்ளன.

Related Post

‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!

Posted by - June 4, 2025 0
”பொன்முடி மீது நடவடிக்கை எ டுக்கவில்லையென்றால் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் மற்ற நிர்வாகிகளின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இது பற்றி…
add a breaking news banner at the top of the image

CM Vijay Speech: மோசமான நிலையில் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்.. விஜய் அறிவிப்பு!

Posted by - May 10, 2026 0
CM Vijay First Speech: நான் உங்க குடும்பத்தில் இருந்து வந்த ஒருவன் தான். அப்படித்தான் நான் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் சினிமாவில்…

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம்.. செயற்குழு உறுப்பினர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அழைப்பு

Posted by - February 7, 2024 0
நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி…

கோவைக்கு பதில் மயிலாடுதுறை? கமல்ஹாசனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த சிக்கல்

Posted by - February 26, 2024 0
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை…

தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை- பயணிகள் அவதி

Posted by - January 9, 2024 0
புதுச்சேரி: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *