மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி… அண்ணாமலை அதிரடி பேட்டி

311 0

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனிடையே நெட்வொர்க் 18 நடத்திய ரைசிங் இந்தியா நிகழ்வில் பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் கூட்டணி தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளருக்கு பிரத்யேக பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை அது பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம். தமிழ்நாட்டில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பிராந்திய கட்சிகள். 2024 இல் நடைபெறவுள்ளது அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மட்டுமே அதிமுக தலைமை வகித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை பாஜகதான். ஆக, மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி” என்று தெரிவித்தார்.

Related Post

aiadmk eps

AIADMK-ல் வெடித்த உட்கட்சி மோதல்.. கடும் வார்த்தைகளால் தலைமைக் கழகம் கடும் தாக்கு!

Posted by - May 12, 2026 0
தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், All India Anna Dravida Munnetra Kazhagam தலைமைக் கழகம் கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. Edappadi…
tvk

சென்னையால் வந்த வினை..! வெற்றிக்காக போராடும் ஆனந்த்?

Posted by - March 17, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே வெடித்துள்ள அதிகார மோதல், விஜய்க்கு தலைவலியாக மாறியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. TVK Vijay TN…

தனி நபர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள்

Posted by - November 17, 2023 0
புதுடெல்லி: சமீபகாலமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தனி நபர்களுக்கு (பர்சனல் லோன்) கடன் வழங்குவதில் பல்வேறு நிபந்தனைகள் தளர்வு ஏற்பட்டன. இதன்…
w 2

விஜய் பற்றி விசாரித்த முதல்வர்: நிர்வாகிகள் கைகலப்பு

Posted by - March 19, 2026 0
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை…

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன: ஆய்வறிக்கையில் தகவல்

Posted by - March 14, 2023 0
புதுடெல்லி: உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *