சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

304 0

சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’ எனும் செயலியை கேரள வனத்துறை வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

இதில் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள், தங்குமிடம், பொதுக் கழிப்பறைகள் போன்ற விவரங்கள் பெருவழி (எருமேலி – பம்பா – சன்னிதானம்), சிறுவழி, புல்மேடு என ஒவ்வொரு வழித்தடத்திலும் இருந்தும் சன்னிதானம் வரையிலான தூரம், இலவச குடிநீர் விநியகிக்கும் நிலையங்கள் என சபரிமலை யாத்திரையின் பல்வேறு அம்சங்களை பயனர்கள் இதில் பெறலாம்.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பயனர்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்த முடியும். காட்டு வழிப்பாதையில் உள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்வதன் மூலமும் பயனர்கள் இதனை டவுன்லோட் செய்யலாம். இந்த செயலியை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மோடில் பயனர்கள் பயன்படுத்தலாம். இதில் கோயில் நடை திறந்திருக்கும் நேரம், கோயிலுக்கு செல்லும் வழித்தடங்களில் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நேரம் போன்ற தகவல் கிடைக்கிறது. பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை கொண்டு லாக்-இன் செய்யலாம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் நலன் கருதி தரிசன நேரமும் கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Posted by - June 30, 2025 0
பாஜகவுடன் கூட்டணி என்பதை  முதல்வர் ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார் எந்த கொம்பனாலும்…

விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?

Posted by - December 15, 2024 0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டால் அவருக்காக அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து 3வது முறையாக…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் – சமாதானம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Posted by - February 28, 2024 0
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சமாதானமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்…

வங்காளதேசம் அருகே மிதிலி புயல் கரையைக் கடந்தது: வானிலை மையம் தகவல்

Posted by - November 18, 2023 0
சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

ஒரு வயது குழந்தைக்கு அரிய வகை நோய்: சிகிச்சை செலவுக்காக ரூ.17½ கோடி உதவியை நாடும் பெற்றோர்

Posted by - July 29, 2023 0
சென்னை: சென்னை சேலையூரில் வசித்து வருபவர் ஆகாஷ் மிஸ்ரா. ஐ.டி. நிறுவன ஊழியரான இவருக்கு ஒரு வயதில் சிவான்ஷி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *