மீண்டும் வருகிறதா ஆதி குணசேகரன் கேரக்டர்.. எப்படி இருக்கு எதிர்நீச்சல் சீரியல்… டி.ஆர்.பி. ரேட்டிங் நிலவரம் இதுதான்!

308 0

மாரிமுத்துவின் கேரக்டருக்கு சரியான நபர் கிடைத்தால் குணசேகரன் மீண்டும் என்ட்ரி ஆகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்நீச்சல் மெகா தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் மாரிமுத்து உயிரிழந்த நிலையில், அந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு தற்போது எப்படி உள்ளது என்று பார்க்கலாம். சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடர் மூலமாக தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தார்.

பல்வேறு தமிழ் படங்களில் நடித்தும், உதவி இயக்குனராக மாரிமுத்து பணியாற்றியிருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல்தான் அவரது கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஏராளமான திரை பிரபலங்கள் மாரிமுத்துவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். தற்போது எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்துவுக்கு பதிலாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் மாரிமுத்து இல்லாத எதிர் நீச்சல் தொடர் எப்படி இருக்கிறது என்பதையும் ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.தற்போது மாரிமுத்து வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக என்பதாக திரைக்கதையை வடிவமைத்துள்ள இயக்குனர் திருச்செல்வம், விறுவிறுப்பு குறையாமல் காட்சிகளை உருவாக்கியுள்ளார். இதனால் மாரிமுத்து இல்லாத ஒரு குறையை தவிர்த்து மற்றபடி எல்லாம் ஓகே என்கிறார்கள் எதிர்நீச்சல் ரசிகர்கள். இதனால் தற்போதும் சீரியில் நம்பர் ஒன் இடத்தை எதிர் நீச்சல் பிடித்திருக்கிறது. டி.ஆர்.பி. ரேட்டிங்கில் 10.79 புள்ளிகளை எதிர்நீச்சல் பெற்றுள்ளது.

Related Post

2 பான் கார்ட் இருக்கா? அபராதம், சிறை தண்டனை கிடைக்கும்: இப்பவே இப்படி சரண்டர் பண்ணுங்க!!

Posted by - March 28, 2023 0
ஒருவர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம். அல்லது தண்டனை மற்றும்…

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Posted by - April 10, 2024 0
செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் தங்கள் முகத்தைக் கண்ணாடியில்…

உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் வெங்காய தோசை

Posted by - March 11, 2023 0
ஓட்ஸில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாகும். தேவையான பொருள்கள் : ஓட்ஸ் – 3 கப் அரிசி மாவு –…

இந்த பிரச்சனை இருப்பவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்பது நல்லது : எப்போது ஆபத்தாக மாறும்..?

Posted by - December 28, 2022 0
காளான் என்பது பூஞ்சை வகையைச் சார்ந்த உணவுப் பொருளாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிர்ம்பியுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். சைவ உணவு உண்பவர்களின் முதன்மையான உணவுத்…

உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருக்கா? அப்ப ‘இந்த’ ஒரு எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்..எல்லா பிரச்சனையும் தீருமாம்!

Posted by - November 28, 2023 0
அடர்ந்த காடு போன்ற அடர்த்தியான முடியையும், பனை மரம்போல நீளமான முடியையும் பட்டுபோன்ற பளபளப்பான கூந்தலையும் பெற விரும்புகிறீர்களா? அப்படியென்றால், வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *