முதல்வர் மருந்தகம் துவங்குவது எப்படி… B.Pharm / D.Pharm படித்தவர்களுக்கு செம்ம சான்ஸ்…

170 0

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகங்கள் துவங்குவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது. முதல்வர் மருந்தகத்திற்குத் தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Related Post

vijay

CM Vijay | “கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் மன்னிக்க முடியாத குற்றம்” – முதல்வர் விஜய்

Posted by - May 23, 2026 0
“கோவை சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். “கோவை சிறுமிக்கு…

டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது நல்லது- தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Posted by - September 15, 2023 0
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்புளூயன்சா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.…

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணிக்கு மேல் தடை – காவல்துறை

Posted by - December 28, 2022 0
வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2022 அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும்,…

2026 சட்டமன்ற தேர்தல்: நிறங்கள் அடிப்படையில் தொகுதி பிரிப்பு.. திமுகவின் புதிய வியூகங்கள்

Posted by - June 19, 2025 0
திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை 4 நிறங்களாக பிரித்து, வாக்குகளை அதிகரிக்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும்…

பள்ளி மாணவிகளை வைத்து தொழில்… மகள் மூலம் வலை விரிப்பு.. பெண் புரோக்கரின் திடுக்கிடும் பின்னணி

Posted by - May 22, 2024 0
சென்னையில் பள்ளி மாணவிகளை லாட்ஜுக்கு அனுப்பி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த பெண் புரோக்கர் குடும்பத்தினரோடு சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை, வளசரவாக்கம்  வீட்டில் வைத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *