வங்கியில் லோன் வாங்கப்போறீங்களா..? அப்ப இந்த விஷயங்களை எல்லாம் தெரிஞ்சிவச்சிக்கோங்க!

219 0

லோன் வாங்கும்போது, நீங்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லை என்றால் கடன் வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

கடன் சார்ந்த அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய பொருளாதாரத்தில் லோன்கள் என்பது பலருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பர்சனல் லோன்கள், கார் லோன்கள், அடைமான லோன்கள் மற்றும் கல்விக் கடன்கள் போன்ற பல வகையான லோன்கள் கிடைக்கின்றன.

நமக்கு தேவையான பணத்தை உடனடியாக கொடுத்து அதன் பிறகு அதனை வட்டியோடு வசூல் செய்யப்படும் செயல்முறை மூலமாக லோன்கள் இயங்குகிறது. ஆனால் லோன் வாங்கும்போது, நீங்கள் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லை என்றால் கடன் வலைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

உங்களுடைய பொருளாதார தேவைகள் ஒரு லோன் வாங்குவதற்கு முன்பு உங்களுடைய தனிப்பட்ட பொருளாதார தேவை என்ன என்பதை ஆய்வு செய்து அதற்கு தகுந்த தொகையை மட்டுமே கடனாக வாங்கவும். அதைவிட அதிகமான தொகையை ஒருபோதும் வாங்க வேண்டாம். ஏனெனில் அதனை நீங்கள் திருப்பி செலுத்தும்போது உங்களுக்கு தேவையில்லாத அழுத்தம் உருவாகும்.

கடன் விதிகள் மற்றும் நிபந்தனைகள் எல்லாவிதமான நோய்களும் ஒன்று கிடையாது. வட்டி விகிதம், லோன் கால அளவு மற்றும் பிற கட்டணங்கள் ஆகியவை வங்கி அல்லது கடன் வழங்குனரை பொறுத்து மாறுபடலாம். எப்பொழுதுமே கூடுதல் செலவுகள் மற்றும் கட்டணங்கள் ஆகியவை சிறிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். எனவே ஒரு லோன் வாங்கும்போது இதனை கட்டாயமாக நீங்கள் கவனிக்க வேண்டும்.

உங்களுடைய கிரெடிட் ஸ்கோர்

உங்களுக்கு லோன் தருவதற்கும் அதற்கான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதற்கும் கடன் வழங்குனர்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை ஒரு முக்கியமான விஷயமாக கருதுவார்கள். எனவே லோன் வாங்குவதற்கு முன்பு உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்ப்பது அவசியம். அப்போதுதான் நீங்கள் எதிர்பார்த்த கடனையும், வட்டி விகிதத்தையும் உங்களால் பெற முடியும். நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது உங்களுக்கு குறைவான வட்டியில் கடனை பெற்றுத்தரும் என்பதை மறக்காதீர்கள்.

கடனை திருப்பிச் செலுத்தும் திறன்

உங்களுடைய அடிப்படை செலவுகளில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் ஒவ்வொரு மாதமும் உங்களால் எவ்வளவு தொகையை திருப்பி செலுத்த முடியுமோ அவ்வளவு பணத்தை மட்டும் கடனாக வாங்குவது அவசியம். பல்வேறு லோன் தொகைகள் மற்றும் கால அளவுகளை கணக்கு செய்ய ஆன்லைன் கால்குலேட்டர்களை பயன்படுத்தி உங்களுடைய மாத பேமெண்ட்கள் எவ்வளவு என்பதை ஆய்வு செய்து உங்களுக்கான ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

தவறான லோன்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம்

பல கடன் வழங்குனர்கள் இந்த தொழிலை மிகவும் நேர்மையாகவும், சட்டத்துக்கு உட்பட்டும் நடத்திக் கொண்டு இருந்தாலும், ஒரு சிலர் இதனை தவறான முறையில் மோசடி செய்து சம்பாதித்து வருகின்றனர். எனவே உங்களை லோன் வாங்கும்படி வற்புறுத்தும் கடன் வழங்குனர்களை ஒருபோதும் நம்பாதீர்கள். மேலும் நீங்கள் நம்புவதை விட உங்களுக்கு சிறந்த ஆஃபர்களை வழங்குபவர்களையும் நிச்சயமாக நீங்கள் சந்தேகப்பட வேண்டும். ஆகவே லோன் வாங்குவதற்கு முன்பு பல்வேறு கடன் வழங்கும் ஆஃபர்களை ஒப்பிட்டுப் பாருங்கள்ஒருவேளை கடன் செயல்முறை பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது கடன் விதிகள் உங்களுக்கு புரியவில்லை என்றாலோ பொருளாதார ஆலோசகரை அணுகி உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான குறிப்பிட்ட பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் அவர் உங்களுக்கான தகவல்களை வழங்குவார்.

Related Post

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2025 0
தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு…

அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய் புயல்.. மேற்கு கடலோர மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Posted by - June 8, 2023 0
தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், மேற்கு நோக்கி நகர்ந்து…

இந்திய பெருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஐ.நா. தகவல்

Posted by - January 6, 2024 0
2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக…

நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

Posted by - July 6, 2023 0
புதுடெல்லி: வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…

எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!

Posted by - March 26, 2025 0
டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு, அதிமுக- பாஜக கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர். இபிஎஸ் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு பிறகே அதிமுக பாஜக கூட்டணி மீண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *