மாணவியை காதலிப்பதில் தகராறு: தேர்வு அறையில் 9-ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சக மாணவன்

244 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர் என்ற மாணவரும் படித்து வருகிறார். மாணவர்கள் 2 பேரும் தங்களுடன் படிக்கும் ஒரு மாணவியை காதலித்தனர். இதனால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்துக்கும் உதயசங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றுடன் தேர்வு நிறைவடைவதால் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உதயசங்கர் வீட்டில் இருந்த கத்தியை மறைத்து எடுத்து வந்தார்.Hyderabad: Man Stabbed To Death With Butcher's Knife As People Look On

தேர்வு அறையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். திடீரென ஆவேசமடைந்த உதயசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட ஆசிரியரும் சக மாணவர்களும் உதயசங்கரை தடுத்து நிறுத்தினர். காயமடைந்த ஸ்ரீஹரி சாய் பிரசாத் சிகிச்சைக்காக ராஜாநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ராஜமகேந்திராவரத்துக்கு மாற்றப்பட்டார்.

மாணவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் ஸ்ரீஹரி சாய் பிரசாத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

பெங்களூரு ரெயில் நிலையத்தில் கொலை செய்து டிரம்மில் அடைத்து வீசப்பட்டது பீகார் இளம்பெண்

Posted by - March 17, 2023 0
பெங்களூரு: பெங்களூரு பையப்பனஹள்ளி சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையத்தின் முக்கிய நுழைவு வாயில் பகுதியில் கடந்த 13-ந் தேதி காலையில் ஒரு டிரம் கிடந்தது. அதில், ஒரு…

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

Posted by - August 7, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில்…

மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்

Posted by - September 15, 2023 0
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய…

முதல் நாளே ஹிட் அடித்த ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ….. பங்கு விலை 20% உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி….

Posted by - August 10, 2024 0
நாட்டின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது பங்குகளை இன்று பங்குச்சந்தையில் பட்டியலிட்டது. அந்த சமயத்தில், பங்கின் விலை பெரிய அளவில்…

மத்திய பிரதேசத்தில் மனைவிகளுக்கிடையே தகராறில் கணவர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 20, 2023 0
போபால் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *