விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா?

230 0

#vijay #thalapathy #tamil #kollywood #thala #tamilmemes #thalapathyvijay #tamilcinema #love #ajith #dhanush #trending #samantha #tamilactress #vijaysethupathi #nayanthara #memes #vijaytv #tamilstatus #vijaydevarakonda #tamilsongs #tamilbgm #chennai #tamilsong #kerala #mokkapostu #suriya #instagram #vadivelu #tamilnadu #sivakarthikeyan #surya #beast #yuvan #actorvijay #rashmikamandanna #master #bigil #anirudh #tamilmovie #tollywood #arrahman #ajithkumar #vikram #tamilcomedy #vijayfans #mersal #bollywood #rajinikanth #keerthysuresh #leo #tamilmusic #sarkar #tamillyrics #mokkaengineer #vadivelumemes #tamilan #varisu #india #vijayanna

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா? என்பதை அவரது ஜாதகம் மூலம் கீழே விரிவாக காணலாம்

தமிழ்நாடு தற்போது சட்டமன்ற தேர்தலை நோக்கி பரபரப்பாக இயங்கி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருப்பவர் நடிகர் விஜய்.

விஜய்யின் ஜாதகம் என்ன சொல்லுது?

விஜய்யின் பிறந்த தேதி 22.06.1974 ஒருவரின் ஜாதகத்தில் இயல்பாகவே எந்த நிறம் அவருக்கு உகந்ததாக இருக்கும்,  எந்த நிறம் அவருக்கு எதிர்மறையான ஆற்றல்களை கொண்டு வரும் என்பதை கணிக்க முடியும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் விஜயின் ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் இருக்கிறது.

கடகம் என்றாலே வெள்ளை நிறம், பரந்த கடல், தாய் உள்ளம், அள்ளிக் கொடுக்கும் உதாரண குணம், அனைவரையும் அரவணைக்கும் அன்பு,  கலைத்துறை, உணவு…. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்…

விஜயின் ஜாதகத்திற்கு ஏற்ற நிறங்கள் எது?

திமுக கொடியில் கருப்பு சிவப்பு இரண்டு நிறங்கள் உள்ளன. இவை இரண்டுமே விஜயின் ஜாதகத்தில் உள்ள செவ்வாய்க்கு ஆகாது. செவ்வாய் என்றாலே சிவப்பு. வலிமை இழந்த செவ்வாய் கொண்டிருக்கும் விஜய்க்கு சிவப்பு ஆகாது. அதேபோல விஜய் லக்னத்திற்கு ஆறாம் வீட்டு அதிபதியாக சனி வருகிறார்.

கருப்பு நிறம் இப்படியான சூழ்நிலையில் திமுக வைத்திருக்கும் கொடியின் நிறத்திற்கு எதிராக விஜயின் அமைப்பு இருப்பதால் நிச்சயமாக திமுகவை எதிர்த்தால் விஜய்க்கு வெற்றி உண்டு என்பதை ஜாதக ரீதியாக கணிக்க முடிகிறது.

அதிமுக கொடியில் இருக்கும் வெள்ளை நிறம்..!

அப்படி என்றால் அதிமுகவிலும் சிவப்பு கருப்பு நிறம் உள்ளது என்று நீங்கள் யோசிக்கலாம். முக்கியமாக “வெள்ளை நிறம்” சிவப்புக்கும் கருப்புக்கும் நடுவில் உள்ளதை கவனித்திருப்போம், அந்த வெள்ளை நிறம் தான் சந்திரனின் வீடான கடகத்தை குறிக்கும்.

இப்படியாக வெள்ளை நிறத்தின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் விஜய்க்கு அதிமுக கொடியில் இருக்கும் வெள்ளை உதவி செய்யும் என்று கூறலாம். குறிப்பாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பச்சை நிறத்தில் அமைந்திருக்கிறது.

புதன் விஜய்யின் ஜாதகத்தில் வலிமையாக இருக்கிறார். அந்த புதனின் நிறம் பச்சை. வலிமையாக இருக்கும் நிறம் பச்சை விஜய்க்கு உதவி செய்யும் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது… இவை வைத்து மட்டுமே ஒருவரின் வெற்றியை தீர்மானம் செய்ய முடியுமா என்றால் 70% தீர்மானம் செய்ய முடியும்.

ஆனால், விஜய் வைத்து மட்டுமே கட்சி அல்ல அவருடைய தொண்டர்களையும் நிர்வாகிகளையும் வைத்து கட்சி நகரும். எதிர்காலத்தில் யார் யாருடன் கூட்டணி என்பதை அந்த கட்சி தீர்மானிக்கும். ஆனால், ஜாதக ரீதியாக விஜயின் அமைப்புக்கு ஏற்ற நிறங்கள் அவருக்கு சாதகமாகும். அவருடைய அமைப்புக்கு எதிர்ப்பாக இருக்கும் நிறங்கள் பாதகமாகவும் செயல்படும் என்பதை நிச்சயமாக கணிக்க முடியும்.

திமுகவை எதிர்த்தால் விஜய் ஜெயிப்பாரா?

நிச்சயமாக அவருக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. குறிப்பாக அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை எதிர்த்து விஜய் குரல் கொடுத்தால் மக்களின் ஆதரவு அவருக்கு உண்டு என்பதை கடகத்தில் இருக்கும் செவ்வாய் மூலம் நம்மால் உணர முடியும்.

உதாரணத்திற்கு சீமானின் ஜாதகத்தில் சூரியன் துலாத்திலிருந்து அரசை எதிர்த்தால் ஆதரவு உண்டு என்ற நிலைப்பாட்டில் இளைஞர்களின் ஆதரவோடு சீமான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்தால் இளைஞர்களின் ஆதரவு உண்டு என்ற அடிப்படையில் விஜய்க்கும் மக்களின் ஆதரவு ஏற்படும்.

Related Post

mks scaled

MK Stalin: சேம் கான்செப்ட்..! ஸ்டாலின் அறிக்கை வைரல்

Posted by - ஜூன் 17, 2026 0
MK Stalin TN Finance: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை தொடர்ந்து, 2021ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை…
ஜிடிஏ 6 வீடியோ கேம் மற்றும் பிரதமர் மோடியின் சாதனைப் பட்டியல்

ஜிடிஏ 6 வெளியீடு: பிரதமர் மோடி புதிய சாதனை பட்டியல்

Posted by - நவம்பர் 20, 2026 0
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிடிஏ 6 வீடியோ கேம் உலகம் முழுவதும் நேற்று வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிடிஏ 6 உலகளாவிய வரவேற்பும் வசூலும் அமெரிக்காவைச்…
ChatGPT Image Jun 22 2026 10 16 20 AM

CM Vijay : பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை..

Posted by - ஜூன் 22, 2026 0
CM Vijay 52nd Birthday: முதலமைச்சரான பிறகு விஜய் முதல்முறையாக தனது பிறந்தநாளை கொண்டாடும் விஜய், சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. CM…

சம வேலைக்கு சம ஊதியம்: போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 1560 பேர் மீது வழக்கு பதிவு

Posted by - டிசம்பர் 27, 2025 0
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்து 560 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம வேலைக்கு சம…
Untitled 1

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

Posted by - மார்ச் 24, 2026 0
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன