mks scaled

MK Stalin: சேம் கான்செப்ட்..! ஸ்டாலின் அறிக்கை வைரல்

54 0

MK Stalin TN Finance: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை தொடர்ந்து, 2021ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

MK Stalin TN Finance: கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தையின் மீது 62 ஆயிரம் ரூபாயாக இருந்த கடன் சுமை 2026ம் ஆண்டில் ரூ.1.29 லட்சமாக உயர்ந்துள்ளது.

ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி

தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். அதில், தமிநாட்டின் கடன் சுமை 10 லட்சம் கோடியை கடந்துள்ளதாகவும்,பொதுத்துறை நிறுவனங்கள் கொண்டுள்ள கடனை சேர்த்தால் இதன் மொத்த அளவு 13 லட்சத்து 18 ஆயிரம் கோடியை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதவாது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபர் மீதும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 934 ரூபாய் கடன்மை உள்ளது. சுந்தந்திரம் பெற்றதில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்கும் வரை மாநில அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக ரூ.4.96 லட்சம் கோடி கடனாக பெற்று, தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமை 10 லட்சம் கோடியை கடந்துள்ளது. 2006-11 காலகட்ட திமுக ஆட்சியின் போது சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடனாக வாங்கப்பட்ட நிலையில், கடந்த ஆட்சியின் போது அது 10 மடங்கு அதிகரித்துள்ளது.மாநில அரசின் சொந்த வருவாய் குறைந்ததால் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கவும், அன்றாட செலவுகளுக்கே திமுக அரசு கடன் வாங்கியுள்ளதாகவும், மாநில அரசின் வருவாயை பெருக்க மூல தனசெலவை பெருக்காமல், மூலதனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு சில திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இதனை திமுகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மாநில அரசின் ஜிடிபி குறிபீட்டின் அடிப்படையில், மத்திய அரசு அனுமதித்த அளவிலேயே கடனாக வாங்கப்பட்டுள்ளது என விளக்கமளித்து வருகின்றனர். ஆனால், வாங்கப்பட்ட தொகை மாநில வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படவில்லை என்பதே தவெகவினரின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் தான், 2021ம் ஆண்டு அதிமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.

”கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன்”

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,  முறைகேடுகள் செய்து, தம்மையும் தம்மைத் தாங்கிப் பிடிக்கும் பினாமிகளையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2006 – 2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் 3.55 லட்சம் கோடி.இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் – ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது.  அமைச்சர்களும் – முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்று வாரிச் சுருட்டி, அப்பாவி மக்களின் வயிற்றில் ஓங்கி அடித்து இருக்கிறார்கள். இந்த அளவிற்கு ஒரு கேடுகெட்ட நிதி நிர்வாகத்தை அளித்துள்ள முதலமைச்சரையும் இதுவரை தமிழகம் பார்த்ததில்லை.  பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் – உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. வேலைவாய்ப்பும் இல்லை; தொழிற்சாலையும் இல்லை என்பதை விட – மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலையை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி – இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்கள்” என ஸ்டாலின் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலினை நோக்கி கேள்வி

ஸ்டாலினின் அந்த அறிக்கையை குறிப்பிட்டு நெட்டிசன்கள் திமுகவை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதிமுக அரசு 10 ஆண்டுகளில் 3.55 லட்சம் கோடி கடன் வாங்கியதை கடுமையாக விமர்சித்து விட்டு, 5 ஆண்டுகளில் சுமார் 4.96 லட்சம் கோடி கடன் சுமையை கூடுதலாக ஏற்றியுள்ளீர்களே? இதற்கான பதில் என்ன? அதிமுக ஆட்சியில் மூலதனங்களுக்காக நிதி ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டினீர்களே? திமுக ஆட்சியில் மூலதன செலவை காட்டிலும், ஒவ்வொரு ஆண்டும் கடனுக்கான வட்டிக்கு அதிகம் செலவாகியுள்ளதே? 2021-22 நிதியாண்டில் மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை 58 ஆயிரத்து 692 கோடியாக ரூபாயாக மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், 2026ம் ஆண்டில் இது 78 ஆயிரத்து 324 கோடி ரூபாய் ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனில், “ திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தின் நிதி நிலைமை தமிழக மக்களுக்காக, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக  என்பதை உறுதிப்படுத்திடும் வகையில் வேகமாகச் சீரமைக்கப்படும்” என கூறிய ஸ்டாலினின் வாக்குறுதி என்னவாயிற்று எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Post

விரக்தியில் விஜய்! கூவி கூவி அழைத்தும் கூட்டணிக்கு வராத கட்சிகள்.. மக்களே இனி துணை!

Posted by - July 31, 2025 0
நடிகர் விஜய் தன்னுடைய தவெக தலைமையிலான கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்தே களமிறங்குவார் என்று கருதப்படுகிறது. தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள்…
Generated Image March 08 2026 7 08PM

கூட்டணி வாய்ப்புகளை கோட்டை விட்ட தவெக: ஆதவ் மீது ஆதங்கத்தைக் கொட்டிய விஜய்

Posted by - March 8, 2026 0
தவெக-வை நெருங்கி வந்த கட்சிகளுடன் கூட்டணியை பேசி முடிக்காமல், முறுக்கி கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீது அதன் தலைவர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் சொல்கின்றன.…
dmdk 2 e1776320866955

“பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

Posted by - April 16, 2026 0
மு.க.ஸ்டாலின் ஆட்சி மீது போதைக் கலாச்சாரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுதான் இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியது திமுக-வினரை அதிருப்தி அடையவைத்துள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கான…
vv e1773726199570

முதல்வர் ரேஸில் முந்துகிறாரா விஜய்…

Posted by - March 17, 2026 0
“பாஜக-வுடன் கூட்டணி பேசுகிறார் விஜய் என்ற செய்தியை திட்டமிட்டுப் பரப்புவதே திமுக தரப்பிடம் ‘ஊதியம்’ பெறும் யூ டியூப் சேனல்கள் தான். இதன் மூலம் விஜய்க்கு ஆதரவாக…

TVK Vijay: ‘உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு’ .. விஜய் ஆதரவாக இளையராஜா.. மாறும் களம்!

Posted by - May 1, 2026 0
விஜய்க்கு சினிமாத்துறையில் இருந்து ஆதரவுக்குரல் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கொடுக்கப்படுகிறது. சின்னத்திரை, பெரியதிரை பல பிரபலங்கள் அவருக்காக வீதிதோறும் பரப்பு மேற்கொண்டனர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *