விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்?

229 0

சீரியலில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே விரைவில் முடிவுக்கு வரலாம் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள்.

சீரியல் இந்த மாதம் இறுதியில் முடிவடையவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெகுநாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி – தனம், ஜீவா – மீனா, கதிர் – முல்லை, கண்ணன் – ஐஸ்வர்யா என நான்கு அண்ணன் தம்பிகளும் பார்வையாளர்களின் கண் படும்படி ஒற்றுமையாக இருந்தனர். பின்னர் ஜீவா ஒருபக்கம், கண்ணன் இன்னொரு பக்கம் என வீட்டை விட்டு வெளியேறினர். தற்போது புது வீடு கட்டி அனைவரும் முன்பு போல் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

இதற்கிடையே தனம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த விஷயம் மீனா மற்றும் முல்லைக்கு மட்டுமே தெரிந்திருந்தது. வீட்டினருக்கு தெரியாமல் அவருக்கு சிகிச்சையளிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் ஐஸ்வர்யா மூலம் அனைவருக்கும் தெரிந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மொத்தமுமே தனத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர்.

 

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரும் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இது உண்மையா என  தெரியவில்லை. தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோட்களில் கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது. அதே நேரத்தில் சீரியலில் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஆகவே விரைவில் முடிவுக்கு வரலாம் என்கின்றன சின்னத்திரை வட்டாரங்கள்.

Related Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை காவ்யாவா இது?- மேலாடை கழட்டி கிளாமர் போட்டோ ஷுட்

Posted by - February 20, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் 3 வருடங்களுக்கும் மேலாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பமாக இருப்பதை மையமாக…

மனிஷா கொய்ராலாவின் கேரியரை முடிச்சுவிட்ட ரஜினி – அவங்கள இப்படி புலம்ப வச்சுட்டீங்களே.?!

Posted by - June 20, 2025 0
ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நட்த்திரங்களுடன் நடித்து வந்த மனிஷா கொய்ராலாவின் தென்னிந்திய கேரியர் சரிந்ததற்கு ரஜினிதான் காரணமாக இருந்திருக்கிறார். இத அவங்களே தான் சொல்லியிருக்காங்க. 90…

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி.. யார் பாருங்க

Posted by - November 7, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம். பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில்…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா

Posted by - May 9, 2023 0
சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதனுடைய 9வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களின் தேர்வுக்கான…

இட்லிக்கு அட்டகாசமாக இருக்கும்.. கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி

Posted by - September 30, 2023 0
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் அல்லது சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் ஒரே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *